27.12.20

நீண்டகால மாயக்குதிரை-1


 

ரஜினி  எனும் மாயக்குதிரையைச் சொல்லிச்  சொல்லி மக்களை குழப்பி மடைமாற்றம் செய்து திராவிட முன்னேற்றக்கழகத்திற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் செல்லவிருக்கும் வாக்குகளை பிரிப்பதகாக நினைத்து அதோ வருகிறார் , இதோ வருகிறார்.. அவருக்கு அவ்வளவு சதவீத வாக்குகள் இருக்கிறது. என்று ஒரு தரவுகள் இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ கும்பல்களும் , நடுநிலை, அரசியல் நோக்கர்கள் எனும் பேர்வழிகள்!

காலி டப்பா!

இவர் விசித்திரமானவர்!  21 வயது ஆர்யா ராஜேந்திரன் இந்தியாவின் இளம் மேயராக வர இருக்கும் நேரத்தில் 70 வயதைக்கடந்தும் அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி தன்னுடைய 45 வயது கடந்த ரசிகர்களை இனிப்பினை சுவைக்க முடியாத சுகர் பேசன்டைப் போல் ஏங்க வைத்துக்கொண்டிருக்கிறார். 

1990 களில் ஆரம்பித்த பேச்சு இன்னும் ஓய்ந்த பாடில்லை. இவரை 007 திரைப்பட வரிசை காலத்துடன் தான் ஒப்பிட வேண்டும் .அது போகட்டும் ஆனால் இவருக்காக கட்டமைக்கப்பட்ட பின்பங்கள் தான் இமய மலையை விட பெரிதாக இருக்கிறது.

முதலில் இவரை சொல்லும் முன் இவருக்கு இந்த ஆசை தூண்டிய திரைப்பட வசன கர்த்தாக்களையும், பாடலாசிரியர்களையும் தான் சொல்ல வேண்டும் இவர்கள் இல்லையென்றால் இன்றைக்கு ரஜினி எனும் அரசியல் ஆழம் தெரிந்த குளத்தை, சமுத்திரத்திற்கு ஒப்பாக பேச முடியுமா?

1996 தேர்தலில் இவரால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்று இன்று அரசியல் அரிச்சுவடி தரவுகள் தெரியாத ஆளுமைகள் பிதற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கான காரணங்களையும் சூழல்களையும் ஆராய்ந்த அனைவருக்கும் தெரியும் இவர் இல்லையென்றாலும் அன்றைக்கு திமுக வெற்றி பெற்றிருக்கும். காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 1991- 1996 வரை நடத்திய காட்டாச்சி தர்பாரே போதும் ... தமிழர்களின் வழிபாட்டு தெய்வங்களுக்கு வேண்டுதல் நிறைவேற்றத்திற்காக வெட்டப்பட்ட ஆடு,கோழி  தடை போட்டது, தனது உடன்பிறவா தோழி சசிகலாவுடன் கும்பகோண குளத்தில் குளியல் நீராடியது, வளர்ப்பு மகன் திருமணத்திற்கு ஒரு ரூபாய் சம்பளத்தில் கோடிக்கணக்கான செல்வில் ஆடம்பர திருமணம் நடத்தியது, சட்ட ஒழுங்கு பிரச்சினை, ஆட்சி நிர்வாக ஸ்திரமின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் அதிமுக விற்கு எதிராக இருந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு எரியும் தீயில் எண்ணையை ஊற்றிய செயல் போன்றது தான் அன்றைய ரஜினிகாந்தின் அறிவிப்பு. அவரது அறிவிப்பு பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்று சொல்லும் சொழவம் போன்று அதன் பின் இவர் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் தோல்வி தான். ஏன் இவர் சொந்தமாக தயாரித்து நடித்த எல்லாத் திரைப்படங்களும் தோல்வி இன்று வரை தன் மகளின் முயற்சியில் வந்த கோச்சடையான் உட்பட 



வரலாறுகள் இப்படி இருக்க திட்ட மிட்டு தன்னிலை மறந்து பணத்திற்கு பிண அரசியல் செய்து கொண்டிருக்கும் பத்திரிக்கை,ஊடகங்கள், சில அரசியல் புரோக்கர்கள் ஆகா..ஓகோ என்று ஊளையிட்டுக்கொண்டிருக்கின்றன...

எனவே இது போன்ற மாயக்குதிரைகளால் பொதுவாழ்வில் வெற்றி-தோல்வி இரண்டிற்கு மத்தியில் மக்கள் பணி செய்யும்  போர்வீரகளை ஒருக்காலும் வெல்ல இயலாது என்பதை வரவிற்கும் சட்டமன்ற தேர்தல் உறுதிபடுத்தும்!

- நாடற்றவன்







26.3.20

இரக்கமில்லாத பிசிசிஐ!


நானும் உங்களைப்போன்று கிரிக்கெட் ரசிகன் தான். ஆனால் சில நேரங்களில் என்னையும் மீறி எரிச்சலடையச் செய்கிறது அதன் நிர்வாகத்தினால்.

உயிர் பயத்தில் உலகப்போர்!
கொரோனா எனும் உயிரியல் போரில் உலகம் முழுவதும் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு வீட்டிலேயேத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடுமையை இந்த நூற்றாண்டில் பெற்றுக்கொண்டிருக்கும் நாம் பெருமைக்குரியவர்கள் அல்ல!
இப்பொழுது வரை ( March 26, 2020, 13:12 GMT ) நேரத்தின் படி உலகெங்கும் கொரோனாவால் 198 நாடுகளில் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 4,71,802 , அதில் இறந்தவர்களின் எண்னிக்கையோ 21,297  https://www.worldometers.info/coronavirus/#page-top  எனும் நிலையில் இன்னும்  எத்தனை உயிர்களை காவு வாங்க இருக்கும்? என்று ரத்தத்தை உறைய வைத்துக்கொண்டிருக்கின்றது.

கொரோனாவைப்பற்றி!


இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள நாடுகள்  தன் மக்களை போராடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்திய நாடும் அதற்கு தயாராகி களமிறங்கியிருக்கிறது என்றால் அது உண்மைதான் .
கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஒரு நாள் மக்கள் ஊரடங்கு  எனும் பெயரில் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். அதுவும் ஓரளவிற்கு மட்டுமே நிறைவேறிய நிலையில் இதற்கு மேலும் தாமதித்தால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாதென்பதைக் கருதி 24 ஆம் தேதி இரவு 8 மணிக்கு அவரது வழக்கமான மனதின் குரலின் மூலமாக நாட்டுமக்களுக்கு இந்த நோயின் வேகம் குறித்தும், தாக்கம் குறித்தும் ஓரளவிற்கு சொன்ன அவர் அதனைக்கட்டுப்படுத்த வேறு வழியின்றி 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார்.
அவர் அதில் சொல்லியது ஒன்று மட்டும் தான். அது "தனியார் நிறுவனங்கள்" தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்குங்கள் என்று.!

கிரிக்கெட் சங்கங்களின் பங்களிப்பு!
இலங்கையும் இந்த கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை விட மிகவும் பின்தங்கியுள்ள இலங்கை நாட்டின் கிரிக்கெட் சங்கம் தன்னுடைய பங்களிப்பாக 25 மில்லியன் இலங்கை ரூபாய் வழங்கியுள்ளது.
https://www.indiatoday.in/sports/cricket/story/sri-lanka-cricket-board-lkr-25-million-grant-coronavirus-1658732-2020-03-23

பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் தன்னுடைய அரசாங்கத்தின் நிதிக்கு ரூ.5 மில்லியனை வழங்கியுள்ளது. https://news.abplive.com/sports/pakistan-cricketers-to-donate-rs-5-mn-to-govt-emergency-fund-to-fight-covid-19-pandemic-1182623

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய நாட்டு மக்களுக்காக தங்களுடைய 15 நாள் ஊதியத்தை வழங்கியிருக்கின்றனர். https://sports.ndtv.com/cricket/coronavirus-bangladesh-cricketers-donate-half-month-salary-to-government-relief-fund-2200749

இரக்கமில்லாத பிசிசிஐ!
பிசிசிஐ எனும் பெயரை கிரிக்கெட் விளையாடுபவர்கள், ஆர்வலர்கள் அதனை எதிர்ப்பவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தெரியும் என்பதால் தான் இந்த தலைப்பை வைக்கச் செய்தது.
அது என்ன எதிர்ப்பவர்கள் என்று படிப்பவர்களுக்கு தோன்றலாம் நாம் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால் அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை அந்த குடுமி அவர்கள் கையில் தான் இருக்கிறது. 
உலக கிரிக்கெட் அமைப்புகளில் வருமானம் ஈட்டுதலில் முதல் இடத்தை பல வருடங்களாக தக்கவைத்துள்ளது இந்த பிசிசிஐ.  https://cricket.yahoo.net/news/top-10-most-affluent-cricket-182300645
உலகத்தில் முதல் முதலாக கிரிக்கெட்டை தொடங்கியவர்களே தொடமுடியாத தூரத்தில் ( விண்ணுக்கும்-மண்ணுக்கும்) இருக்கிறது இந்திய கிரிக்கெட் சங்கம். அதன் சொத்து மதிப்பானது சுமார் ரூ.15,000/-கோடி ( பதினைந்தாயிரம் கோடிகள் ) இருக்கும் என்று இணையதள ஆதாரச் செய்திகள் தரவுகள் தருகின்றன. 

 https://www.quora.com/How-did-BCCI-become-one-of-the-richest-sports-organizations-in-the-world

இதையும் தாண்டி இந்த சங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட ஐபில் மூலமாகவும் பல கோடிகள் புரண்டு கொண்டிருக்கும் பிசிசிஐ!

அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு பரிணாமங்களில் வருவாய் ஈட்டிக்கொண்டிருக்கும் பிசிசிஐ என்றால் அது மிகையாகாது.  பிசிசிஐ அறிவிப்பின் படி இந்திய பொருளாதாரத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.1203,64,00,000 கோடிகளை 2015 ஐபில் சீசனில் பகிரப்பட்டுள்ளது என்று தரவுகள் தருகின்றன. https://en.wikipedia.org/wiki/Indian_Premier_League#Foundation

மேலும் கூடுதலாக கடந்தாண்டு 2019 நடந்த ஐபில் ன்  மதிப்பான ( Brand Value  ) ரூ.3576,51,25,000 கோடிகள் என்று டஃப் அன்ட் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளது.  https://en.wikipedia.org/wiki/Indian_Premier_League#Foundation , https://www.duffandphelps.com/


இந்நிலையில் தான் இன்று பிசிசிஐ ன் தற்போதைய தலைவரும், முன்னால் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், முன்னாள் கொல்கத்தா கிரிக்கெட் அணியின் தலைவருமான திரு.சவ்ரவ் கங்கூலி அவர்கள் ரூ.50 லட்சத்தை கொரோனாக்கெதிரான நிதிக்காக வழங்கியுள்ளார்.

பலகோடி, கடைக்கோடி ரசிகர்களின் பணத்தில் செழித்து,வளமுடன் இருக்கும் இந்த சங்கங்கள் தான் இந்த இக்கட்டான தருணத்தில் உதவ முன் வராமல் இருப்பது வருத்தமளிக்கிறது. ஒரு வேளை இந்திய நாத்திகவாதிகள், சமூக நீதியாளர்கள் எப்பொழுதும் சொல்லும் ஒரு விடயம்; இந்த இந்திய கிரிக்கெட் சங்கம் பார்ப்பனர்கள் பிடியில் இருக்கும் வரை நம்மவர்கள் அதனை வேடிக்கை தான் பார்க்க இயலும் என்பது உண்மை தானோ? என்று யோசிக்க வைக்கிறது.

இப்போது நீங்களே சொல்லுங்கள் இதற்கு இந்த தலைப்பு வைத்தது சரிதானே? 

- நாடற்றவன்
  26.03.2020



20.3.20

மோ(ச)டி உரை!



கொரோனா எனும் உயிர்க்கொல்லி நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாகவும் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. உலகமே பதறிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் இந்தியாவிலும் சில விழுக்காட்டினர் இதனை உணர்ந்து செயல்படத் தொடங்கியுள்ளனர். அப்படியென்றால் மற்றவர்களுக்கு இந்த கொரோனாவைப் பற்றி அச்சமில்லையா? அல்லது அலட்சியமா? என்று கேட்கத்தோன்றுமானால் நாம் பொருளாதாரத்தின் மீது அக்கறையின்மையைக்காட்டும்.
ஏனென்றால் கொரோனாவில் இருந்து மீள்வதற்கும், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கும்; தனிமைப்படுத்திக்கொள்ளுதல், பொது இடங்களில் கூடுதல், திருமண மற்றும் சுற்றுலா , வெளியூர் போவதைத் தவிர்ப்பதால் நாம் அந்த உயிர்க்கொல்லியை அண்டவிடாமல் தடுத்தவிடலாம் ஆனால் இவற்றையெல்லாம் செய்தவதற்கு, நாம் மேலை நாடுகள் போன்று பொருளாதாரத்தில் கொழுத்திருக்கிறமோ என்றால்? இல்லை என்பதே உண்மை நிலை..

நிற்க!

அவ்வாறிருக்கும் நாடுகளே இந்த கொரோனாவைக் கண்டு அஞ்சி..தன் நாட்டு மக்களை காப்பற்றிட வேண்டும் என்று முழு அரசு பலத்தையும் பயன்படுத்தி இறங்கியிருக்கிறது. முழுபலம் என்பதில் பொதுப்போக்குவரத்தை நிறுத்தியிருப்பது மக்களை வெளியில் வரவிடாமல் எச்சரிக்கை கொடுத்து வீட்டில் வைத்திருப்பது மேலும் கொரோனா தொற்று இருப்பவர்கள் வீதிக்கு வந்தால் 21 ஆண்டுகள் சிறை எனப் பல்வேறு தடுப்பரண்கள் செய்தாலும் அவற்றையெல்லாம் விட அவர்கள் செய்த மிகப் பெரிய இரு பாதுகாப்பு என்னவென்றால் உழைக்கும், ஏழை- எளிய மக்களின் மீது கருணைப்பார்வை தான். 
அவர்கள் 15 நாட்களோ அல்லது 1 மாத காலமோ வீட்டினில் முடங்கியிருப்பதால் அவர்கள் அன்றாட வாழ்க்கைத் தேவையினை எவ்வாறு சமாளிப்பது என்பதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கென்று நிதி ஒதுக்கியிருக்கிறது. அதில் சில நாடுகளின் உதாரணங்களை தங்களுடைய பார்வைக்கு!

1. அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் ஊரடங்கு உத்தரவு  போட்டதோடு மட்டுமல்லாமல் தன்னுடை நாட்டு மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்காகவும், கொரோனாவில் இருந்து மீண்டெழுவதற்காகவும்
 1 ட்ரில்லியன் நிதியை ஒதுக்கியிருக்கிறது.
https://www.npr.org/2020/03/17/816822215/congress-weighs-new-massive-wave-of-emergency-funding-to-address-coronavirus

2. கனடா
கனடா நாட்டு பிரதமர் தன்னுடைய மக்களுக்காக கொரோனாவை ஒழிப்பதற்காக மருந்துவ ஆராய்ச்சிக்காகவும், மற்ற நாடுகளுக்கு பொருளாதார உதவி புரிந்ததோடு மட்டுமல்லாமல் தன் நாட்டு மக்களுக்காவும் 1 மில்லியன் இந்திய மதிப்பில் சுமார் 5348 கோடியை ஒதுக்கியிருக்கிறார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
https://sciencebusiness.net/news/canada-pledges-c275m-coronavirus-rd-adding-global-funding-rush

3. நியூசிலாந்து
உலகையே  அதிர்ச்சியில் உறைய வைத்த ஒரு நாடு என்றால் அது நியூசிலாந்து நாடுதான். அந்த நாடு தன் நாட்டு உழைக்கும் தினக்கூலி மக்களை கவனத்தில் கொண்டு 12.1 பில்லியன் டாலரை ( இது அவர்களது ஜிடிபியில் 4% ) ஒதுக்குவதாக நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அதன் நிதியமைச்சர் கிராண்ட் ராபர்ட்சன் அறிவித்துள்ளார். மேலும் அவர் தொழில் முனைவோர்களுக்கு உதவி புரியும் விதமாகவும் ஒதுக்கியிருக்கிறார். குறிப்பாக முழு நேர தொழிலாளர்களுக்கு வாரம் 585 டாலராகவும், பகுதிநேர தொழிலாளர்களுக்கு வாரம் 350 டாலராகவும் , இந்த திட்டமானது அறிக்கப்பட்ட இன்றிலிருந்து ஜூன் 30 ஆம் தேதிவரை அமல்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் வலியுடன் கூறிய வார்த்தைகளானது“We hope to save some jobs through this package, but we will not be able to save all jobs,” Robertson said. “We cannot guarantee that all workers will be retained. This is about helping businesses to adjust.”
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் சில வேலைகளைச் சேமிப்போம் என்று நம்புகிறோம், ஆனால் எல்லா வேலைகளையும் எங்களால் சேமிக்க முடியாது ”என்று ராபர்ட்சன் கூறினார். "அனைத்து தொழிலாளர்களும் தக்கவைக்கப்படுவார்கள் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. இது வணிகங்களை சரிசெய்ய உதவும்
நியூசிலாந்தின் இந்த  அறிவிப்பினை பிரபல கார்டியன் பத்திரிக்கை வெகுவாக சிலாகித்து எழுதியுள்ளதுhttps://www.theguardian.com/world/2020/mar/17/new-zealand-launches-massive-spending-package-to-combat-covid-19

இந்தியாவின் நிலை?
இந்தியாவில் 
தினக்கூலி தொழிலாளர்கள்,
ஒப்பந்த தொழிலாளர்கள்,
ஆட்டோ ஓட்டுனர்கள்,
டாக்சி ஓட்டுனர்கள்,
சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள்,
சிறு வியாபார் வணிகர்கள்,
உணவு விடுதி நடத்துபவர்கள்,
தனியார் துறையிலும், 
சமூக சேவை செய்யும் அறக்கட்டளையில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை என்னவாகும்?
இவர்களையெல்லாம் கிஞ்சின்றும் கருதாமல், மனதில் குரல் என்ற பெயரில் அனைவரும் தங்களை தாங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், வெளியே வரவேண்டாம், கூட வேண்டாம் , வழக்கமான பரிசோதனைகளுக்கு செல்லும் நோயாளிகள் அதனை ஒதுக்கிவையுங்கள் என்று ஒரு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அறிவிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்வதற்காகவா?  அறிவியலால்  சாத்தியமாகவில்லை என்று கூறிக்கொண்டும்,
உத்தவு பிறப்பிக்கும் முழு அதிகாரம் இருந்தும் தனியார்கள் அலுவலகங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதியங்கள் வழங்குங்கள் என்று அறித்திருக்கிறார்.. அதிலும் உச்சபட்ச அறிவிப்பு என்னவென்றால் வரும் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மாலை 5 மணிக்கு வீட்டு வாசலில் நின்று "கை" தட்டவேண்டும். அதெல்லாம் சரி
பிரான்ஸைப் போன்று சாதித்த பின்போ அல்லது வலிமையை உணர்த்துவதற்காகவோ அப்லாஸ் எனும் கைத்தட்டும் முறை அது.
கொரோனாவை ஒழிக்கும் முன்பு மக்களை "கை" தட்டச்சொல்லி,
மக்களை மடையர்களாக்கும் மோ(ச)டியை  உரையினை நிறுத்துங்கள்!

மாட்டு மூத்திரத்தை ஊக்குவிப்பதை விடுத்து மருத்துவர்களையும், மருத்துவ ஆராய்ச்சிகளையும் ஊக்கப்படுத்துங்கள்!

-நாடற்றவன்











15.3.20

கொரோனாவின் உலகப்போர்!

போர் ஆயுதங்கள்,தளவாடங்களுடன் தரைப்படைகள், வான்படைகள், கடல்படைகள் என பல உயிர்பலிகளுடன் நடைபெற்ற முடிந்த இரண்டு உலகப்போர்களை பார்த்த உலகநாடுகள், தாங்கள் இதுவரை காணாத ஒரு உலகப்போரினை எதிர்கொண்டுள்ளனர்.
இன்று கத்தியின்றி, ரத்தமின்றி சந்தித்திருக்கும் மூன்றாம் உலகப்போர் தான் இந்த "கொரோனா" ( கோவிட்-19 ) ( Coronavirus- Covid-19)  எனும் உயிர்க்கொல்லி வைரஸ்.

மார்ச் 15 -2020 அதிகாலை 5.20 பதிவு செய்யப்பட்ட தகவலின் படி உலகம் முழுவதும் 152 நாடுகளில் பரந்து சென்று கொண்டிருக்கிறது இந்த கொரோனா!
கொரோனா வின் பிறப்பிடம்!
சீனாவின் ஊபேய் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆண்டின் டிசம்பர் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸானது விலங்கில் இருந்து மனிதனுக்கு பரவியுள்ள தொற்றுநோய். இதன் பின்னர் ஜனவரி 30 ல் உலக சுகாதார அமைப்பு இத்தொற்றுபரவலை  பொது சுகாதார பண்பாட்டு அவசரநிலையாக ( PHEIC )  அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மார்ச் 12 -2020 அன்று இந்த கொரோனா- கோவிட் 19 யை உலக தொற்று நோய் என்று உலக சுகாதார அமைப்பு ( WHO ) அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கெதிராக அவசர தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறைக்கூவல் விடுத்துள்ளார் ஐநா வின் பொதுச்செயலாளர்  ஆன்டெனியோ குட்டரெஸ்.
இந்நோய் குறித்து சீன அரசினை எச்சரித்த 34 வயதான சீன மருத்துவர் இலீ வென்லியாங்க் .



கொரோனாவின் ஆட்டம்!
உலகம் முழுவதும் கொரோனாவால் 1,56,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,839 பேர் இறந்துள்ளனர் மேலும் 5,652 பேர் தீவிர அவசரசிகிச்சைப்ப்பிரிவிலும், 69,332 பேர் ஆரம்பகட்ட நிலையிலும் இருக்கின்றனர். இதில் ஆறுதலான விடயம் என்னவென்றால் 75,937 பேர் அதிதீவிர சிகிச்சைக்குப்பிறகு குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக இறந்தவர்கள் எண்ணிக்கையில் முறையே சீனா-3,209 பேரும், இத்தாலி-1441 பேரும், ஈரான்-611 பேரும் முதல் மூன்று இடங்களில் இருந்து வருகின்றது. இதில் கடைசியாக அமெரிக்காவின் விர்ஜின் தீவில் ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார். உலகம் முழுவதும் மணிக்கணக்கில் பரவிக்கொண்டிருக்கிறது.




இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை!..
இந்தியாவில் இன்றைய காலை நிலவரப்படி 100 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அதில் இரண்டு பேர் இறந்துள்ளனர் மேலும் 88 பேர் தீவிர கண்கானிப்பிலும் , 10 பேர் குணமடைந்துள்ளனர். இது இந்தியாவை இதோட விட்டு வைத்துவிடாது.. ஏனென்றால் உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு இந்தியா ஆனால் சுகாதாரத்திலோ அல்லது முன்னெச்சரிக்கையிலோ இன்னும் வளர்ந்த நாடுகள் , குறிப்பாக சீனா அளவிற்கு இல்லாததால் இக்கொரோனா தொற்று அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

கொரோனா எவ்வாறு பரவுகிறது?
கொரோனாவானது மனிதர்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.
1. இருமுவதால் ( தும்மல்)
2. மூக்கு, கண் மற்றும் வாய்கள் வழியாக 
3. கை விரல்களின்  மூலமாக
கொரோனாவை கண்டுபிடிப்பதற்கு 2 முதல் 14 நான்கு நாட்களை வரை ஆகலாம்.

கொரோனாவின் அறிகுறிகள்!
உலகளவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள அறிகுறிகள்..
1.காய்ச்சல்
2.இருமல்
3.மூச்சுத்திணறல்
4. உடம்புவலி
5. குழப்பம்
6. தலைவலி
7. நெஞ்சுவலி
8. தொடர்ந்து மூக்கு ஒழுகுதல்
9. வயிற்றுப்போக்கு
10. வாந்தி
மேலும் இந்த கொரோனா இதயநோயாளிகள், நீரழிவு நோயாளிகள், புற்றுநோயாளிகள் என எவரையும் விட்டு வைக்கவில்லை.
இதுவரை இறந்தவர்களின் தரவுகள் அடிப்படையில் பெண்களை விட இரண்டுமடங்கு ஆண்கள் தான்.
மேற்கண்டவைகளில் ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தினை அணுகவும்.

வதந்திகள்!
1. வெயில் அதிகமாக இருக்கும் நகரங்களில் வராது
2. வயதானவர்களை மட்டும் தொற்றுக்கொள்ளும்
3. மாட்டு மூத்திரம் குடித்தால் குண்மாகிவிடும்
4. குடிப்பவர்களுக்கு வராது
5. மஞ்சள் அதிகமாக எடுத்துக்கொண்டால் வராது
6. கோழிக்கறி சாப்பிடுவதால்

ஆன்மிகத்தால் சாத்தியமாகதது அறிவியலால் சாத்தியமாக்கியிருக்கிறது!

ஆம் உலகெங்கும் உள்ள பெரும்பான்மையான மதங்களின் பிடியில் தான் பல்வேறு மக்கள் பிடித்துவைக்கப்பட்டுள்ளனர். அது கிரிஸ்துவம், இஸ்லாம் மற்றும் இந்து மதம் உட்பட மதங்கள் பரவிக்கிடக்கின்றன ஆனால் இந்த கொரோனாவை இவைகளால் கட்டுப்படுத்த முடியவில்லை ஏனென்ன்றால் இவைகள் எல்லா கற்பனைகள் என்பது தற்பொழுது அம்பலமாகிக்கொண்டிருக்கின்றன.
இந்துக்கள் கோவிலுக்கு வராதீர்கள் என்று திருப்பதி முதல் சபரிமலை வரை கூவிக்கொண்டிருக்கின்றனhttps://www.patrikai.com/coronavirus-restrictions-in-tirupati/


ஏசு கிருஸ்து பிறந்த பெத்லகமே கேள்விக்குள்ளாகியுள்ளது! வாடிகன்


கிருஸ்துவ சர்ச்களின் நிலையும் அதே நிலைதான்.

சரி இவர்கள் இருவரில் இருந்து மாறுபட்ட இஸ்லாம் மதம் என்று பறைசாற்றிக்கொள்ளும் மெக்காவின் நிலையும் இவர்களுக்கு சரிசமமாக இருக்கிறது↓



மருத்துவர்கள் "கை"ப்பற்றியுள்ளனர்!
ஆன்மிகத்தால் முடியாதை மனித இனத்தின் அறிவியால் இந்த கொரோனாவை  கண்டுபிடித்து, கட்டுப்படுத்தி, குணமாக்கி  வருகின்றனர்.மருத்துவர்களின் பணி இதில் போற்றத்தக்கது.

பங்குச் சந்தை முதல் பரலோகத் தந்தை வரை,
மடங்கள் முதல் மால்கள் வரை ஆட்டம் காண வைத்துள்ளது இந்த கொரோனா!


கொரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி?
https://www.health.harvard.edu/diseases-and-conditions/coronavirus-resource-center
1.குடும்பத்திலோ அல்லது அருகில் இருப்பவர்கள் யாரெனும் உடல் நிலை சரியில்லாமலிருந்தால் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்

2.முழங்கைகள் வரை அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசரால் கழுவ வேண்டும்

3.வீட்டில் உள்ள பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

4. இருமல் வரும் போது கைக்குட்டை அல்லது டிஸ்சு பேப்பரை பயன்படுத்த வேண்டும்.

5. கைகளால் கண், மூக்கு, வாய் களை அடிக்கடி தொடுவதை தவிர்க்கவும்.

நோயற்ற வாழ்வே! குறைவற்ற செல்வம்!

- நாடற்றவன்







6.2.20

பூவுடன் சேர்ந்து மணக்கப்போகும் நார்!


"பூவுடன் சேர்ந்து நாரும் மணக்கும்" என்ற ஒரு பழமொழி கிராமத்து வழக்கத்தில் இன்றளவும் தன்னை உயிர்பித்துக்கொண்டிருக்கிறது. ஆம், இந்த தலைப்பிற்கு பொருத்தமாக பொருந்தி போயிருப்பவர் திரு. பிரஷாந்த் கிஷோர் பாண்டே எனும் வட இந்தியர் 

பி.கே வின் முதல் அரசியல் உக்திப்பயணத்திற்கு வித்திட்டவர் இன்றைய இந்திய பிரதமர் திரு.நரேந்திரமோடி.

நிற்க!  புரிவதற்கு சற்று நிதானமாக படிக்கவும்.

பிகேவின் முதல் அரசியல் உத்தியோகம் தொடங்கியது நரேந்திர மோடிக்காக குஜராத்தில் 2012 ஆம் ஆண்டு வெற்றி பெற்றது தான். இதன் தொடர்ச்சியாக 2014 ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் இவரின் உக்திகள் வெற்றி பெற்றன என்று சொல்லப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2015 ல் பிஹார் முதல்வர் நித்திஷ்குமார் அவர்களுக்கும் வெற்றி பெற்றுக்கொடுத்தார். அந்த வெற்றியிலும் பிஹாரின் நித்திஷ்குமாரின் ஜேடியு மற்றும் பிஜேபி சேர்ந்து மஹாஹத்பந்தன் கூட்டணி சேர்த்து சட்டசபை தேர்தலில் வெற்றி கிட்டியது பிகே விற்கு.இதனைத் தொடர்ந்து 2017-ல் பஞ்சாபின் முதல்வர் அம்ரீந்தர் சிங்கிற்காக திட்டம் வகுத்துக் கொடுத்து வெற்றி பெற்றார்.

அதற்கடுத்ததாக ஆந்திர மாநில ஒஎஸ்ஆர்-காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகனுக்கு உக்தி அரசியல் கற்றுக்கொடுத்து வெற்றி பெற வைத்துள்ளார் என்று நம்புவோம்!


2019-ன் இறுதியில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் பிஜேபி-சிவசேனா வின் மாகா கூட்டணிக்கு வேலைபார்த்து வெற்றி பெற வைத்து அதன் நீட்சியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கும் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு ஆலோசகராக இருக்கிறார்.

இதே பிகே வின் இன்னொரு பகுதியையும் நாம் கட்டாயம் பார்ப்போம்.

1. பிகே வின் ராஜ தந்திரம்!
    ஆம் இவரின் தீர்க்கமான முடிவு எந்த ஒரு கட்சி வெற்றி பெறப்போகும் என்பதை தனது கருத்தாய்வு மற்றும் முன்னரே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு குழு கொடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே அந்தந்த கட்சிகளுடன் தனது அசாத்திய அறிவெனும் திட்டமிட்ட சூழ்ச்சி வலையில் விழ வைத்துள்ளார் என்பது கீழ்கண்ட மாநிலங்களில் தெரிகிறது.
 1. நரேந்திர மோடி குஜராத்தின் 2007  முதல்வராக இருந்து 2012 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் பொழுது தான் பிகே இவருடன் சேர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். (2) இதன் தொடர்ச்சியாக தான் பஞ்சாப்பின் புகழ்பெற்ற அம்ரீந்தர் சிங்குடன் சேர்ந்து பஞ்சாபில் இவரின் சாமர்த்தியத்தை கைப்பற்றி நிரூபித்துள்ளார். (3) பிஹாரின் நித்திஷ்குமாரின் தேர்தலிலும் இதே நிலை தான் ஏற்பட்டது. (4) அதைப்போன்று தான் இவர் ஆந்திராவின் ஜெகன் மோகனுக்கும், (5) டெல்லியில் தற்பொழுது முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சந்திக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் இந்த அசாத்திய சாணக்கியனின் உக்தி அரசியல் உடன் சேர்ந்திருக்கிறது. இதன் வழியில் தான் தற்பொழுது அவர் தென்னகத்தில் ரஜினி,கமல், அதிமுக இருக்க மக்களின் பேராதரவிலும், தீவிர களப்பணியாற்றும் திராவிட இயக்கத் தீரர்கள் ஆதரிக்கும் திமுக வை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இது 2021 ல்லும் பிரதிபலிக்கும்.

2.பிகே வின் தோல்வியும், விமர்சனங்களும்!
    இவரின் மந்திரத் தவறு ( மேஜிக்கல் பால்டர்ஸ் ) அரங்கேறியது உபி யில் தான். இவரின் உக்திகள் உத்திரகான்டிலும், உபி யிலும் காங்கிரசை புரட்டிப்போட்டது. அதிலும் குறிப்பாக உபி யில் 105 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 7 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இப்ப எங்கே சென்றது இவரின் பொலிடிக்கல் ஸ்டேடர்ஜி?
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/elections-results-highlights-when-prashant-kishor-was-of-little-help-to-congress/articleshow/57599728.cms?from=mdr


மகாராஷ்டிர மாநிலத்திலும் சிவசேனாக்களும் எங்களின் வெற்றி எங்களது தொண்டர்களின் கடின உழைப்பே என்றும் அதன் முக்கிய மூத்த நிர்வாகிகளின் கருத்தாக இருக்கிறது.
https://mumbaimirror.indiatimes.com/maharashtra-assembly-elections/news/critics-question-prashant-kishors-role-in-sena-results/articleshow/71748782.cms

மேற்குவங்கத்தில் சமீபத்தில்  திரினாமுல் கட்சி பெற்ற வெற்றிக்கும் மத்திய அரசின் என்ஆர்சி க்கு எதிராக மம்தா பேனர்ஜியின் சீறிப்பாய்ந்த எதிர்ப்பும் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்த பிரச்சாரமும் தான் முன்னிலையில் இருக்கிறது என்று தான் தரவுகள் எடுத்துரைக்கிறது.
https://www.cnbctv18.com/politics/west-bengal-byelection-result-2019-nrc-prashant-kishore-swung-bypolls-in-trinamools-favour-4786651.htm

இறுதியாக இவரைப்பற்றிய வந்த கருத்துகள்!
பிராசாந்த் கிஷோர் ஒரு நல்ல விற்பனையாளராக வேண்டுமென்றால் ஒரு திடகார்த்தமான பொருளை தயாரிக்க வேண்டும் என்பது தான்.
இவர் பெற்ற வெற்றிகள் அனைத்தும் வெற்றிபெறுபவர்களின் அருகில் இருப்பதனாலே மட்டுமே மற்றபடி இவரது உக்தி மந்திரத் தவறுகளாகும்.
https://theprint.in/opinion/prashant-kishor-election-magician-but-wins-only-when-in-winning-team/358974/

நான் ஏன் இந்த தலைப்பை வைத்தேன்?
பூவோடு சேர்ந்து "நாரும்" மணக்கும்- இதில் "பூ" என்பது இந்த தமிழ்ச் சமூகம் அறிவார்ந்து சமத்துவத்துடன் சமூக நீதி பெற்றுத்தந்த நீதிகட்சித் தொடங்கி பெரியார்,அண்ணா, கலைஞர் வழியில் ஒரு சிந்தாந்த கொள்கையை நிலைநாட்டிட எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் களத்தில் நிற்கும் தோழர்களையும், உடன்பிறப்புகளையும், தொண்டர்களையும் மற்றும் ஏகோபித்த ஆதரவளிக்கும் தமிழக மக்களையும் தான். அப்ப "நார்" யாருன்னு கேட்கிறீங்களா?
வேற யாருங்க நம்ம பிரசாந்த் கிஷோர் (பிகே) பாண்டே தான்..

 எச்சரிக்கை!
பிகே வின் குழு நியமனம் செய்யப்போகும் 14 குழுக்கள் எடுக்கப்போகும் தரவுகள் அனைத்தும் நாளைய பொழுது இந்த சிந்தாந்தை சிதைப்பதற்கும், தேசிய கட்சிக்கு எதிராக வரிந்து கட்டி நிற்கும் திமுக போன்ற மாநில கட்சியை உடைப்பதற்கும் உதவும் என்பதை திடமாக சொல்ல முடியும். ஏனென்றால் இவர் ஒரு ஒப்பந்தக்காரர் தான் நாளை ரஜினிக்காகவோ அல்லது தமிழக பாஜக-வுக்காகவோ ஒப்பந்தம் செய்யப்பட்டால் இந்த 14 குழுக்களின் தரவுகளை பயன்படுத்துவார் என்பதில் எமக்கு துளியும் சந்தேகமில்லை.








5.2.20

சமத்துவம் பேசும் நாடோடிகள்!

                                         

நாடோடிகள்-1 ன் தாக்கம் இதில் மேலும் இருக்கும் என்று நினைத்து படத்திற்கு சென்றேன் ஆனால் படம் எதிர்பார்த்ததை விட சற்று தூக்கலாகவே சமூக சமத்துவத்தை தூக்கிப் பிடித்திருக்கிறது.

மனித சமத்துவத்தை இந்த இந்திய நாட்டில் புகுத்துவதற்கு தன் காலங்கள் முழுவதும் சமரசமின்றி போராடிய அம்பேத்கரியம், பெரியாரிசம், மார்க்சியம் , காமராஜர், திருப்பூர் குமரன், வேலுநாச்சியார், தீரன், போன்றவர்களை முன்னிறுத்தி முன்பாதிகள் நகர்த்தியிருக்கின்றன.

முன்பாதியில் கிராமத்திற்கு தேவையான தேவைகளை முன்னிறுத்தி போராட்டம், கூட்டங்கள் ஆகிய இவைகளை ஒரு குழுவாக களத்தில் முன்னெடுப்பவர்கிறார்கள். கதாநாயகன் ஜீவாவிற்கு அவரது மாமன் வீட்டில் உள்ள மூன்று பெண்களையும் தரமறுக்கிறார்கள் அதன் பின் அவரது உறவுமுறையிலேயே பெண்கொடுக்கிறார்கள். திருமணம் முடிந்து முதலிரவிற்கு செல்லும் கதாநாயகனுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. ஏனென்றால் அப்பெண் ஏற்கனவே வேறொருவரை காதலித்ததாகவும், அவரை அவளின் குடும்பத்தினர் கடத்தி வைத்து சித்திரவதை செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாகவும் சொல்லி தன் கையினை பிளேடால் அறுத்துக்கொள்கிறார். முற்போக்கான கதாநாயகன் அன்றிரவே அவளின் காதலனை நேரில் சந்தித்து பேசிகிறார் அந்த நிமிடமே விருப்பமில்லாமல் நடைபெற்ற திருமணத்தை முறித்து அதிலும் தான் கட்டிய தாலியை தானே மூன்று முடிச்சினையும் அவிழ்த்து அப்பெண்ணின் காதலனின் கையில் ஒப்படத்தை அவணை அவளுக்கு கட்டச்சொல்லி பாதுகாப்பாக வெளியூருக்கு அனுப்பி வைக்கிறார். இதனை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் கதாநாயகனையும் அவரது நண்பர்களை நயப்புடைகின்றனர் அதன் பிறகு அவர்கள் சேர்ந்து வாழ்ந்தார்களா அல்லது ஜாதிய திமிருடன் உள்ள அப்பெண்ணின் உறவினர்கள் அவளை மீட்டார்களா? என விருப்ப்புடன் நகருகிறது. பின்பாதியில் முன்பாதியின் கருத்தை இருவேறு சமூக பிரிவைச் சேர்ந்த காதலர்கள் சேருவதற்கு தடையாக இருக்கும் ஜாதிய வன்மத்தின் கூர்களை அந்த பெண்ணின் தாய் தந்தையர்கள் அன்பில் உடைத்தெறிகின்றனர்.
பெண்ணின் சமூகம் பெரும்பான்மையினர்,நாங்கள் ரெண்டு கோடி பேர் இருக்கிறோம் என்று சொல்லும் போது கதாநாயகன் , அந்த ரெண்டு கோடி பேரில் வேலையில்லாத இளைஞர்கள் எத்தனை பேர்? வருமையில் இருப்பவர்கள் எத்தனை பேர் ?
என கேட்கும் கேள்வி திரையரங்கில் இருப்பவர்களே சிந்திக்க வைக்கிறது.

படத்தில் நடப்பு நிகழ்வுகளை மிக தைரியமாக சுட்டிக்காட்டியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துகள் குறிப்பாக உடுமலைப் பேட்டை கவுசல்யா சங்கர், திருநங்கையர்களை சகமனிதர்களாக பார்ப்பது, பெரியார் சிலையினை உடைக்கபடுவது, திருச்சியில் கற்பினி பெண்ணை போக்குவரத்து காவலர் எட்டி உதைத்தது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சமூக அக்கறை ( கோமாளிகளை தொடர்ந்து பேட்டி எடுப்பது ) என சாடியிருக்கிறார்கள்.

இறுதிக்காட்சியில் ஜாதியற்றவர்கள் மாநாட்டில் காதல் திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு, ஜாதிமறுப்பு காதல் திருமணம் செய்தவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு ஒரு நல்ல முன்னெடுப்புடன் படம் முடிகிறது.

புரட்சி என்று தொடங்கும் பாடல்கள் பார்ப்பவர்களின் உணர்ச்சியை தூண்டுகிறது.இயக்குனரின் தையரியமான கதை,திரைக்கதை மற்றும் இயக்கம். சிறப்பான பின்னனி இசைக்கோர்ப்பு மற்றும் கதாபாத்திர தேர்வு என முக்கியத்துவத்துடன் செயல்பட்டிருக்கிறார்.


நடிகர்கள் - எம் சசிக்குமார் , பரணி, நமோ நாராயணா, நடிகைகள் - அஞ்சலி, அதுல்யா ரவி
இசை : ஜஸ்டின் பிராபகர்
இயக்குனர் : சமுத்திரக்கனி

15.1.20

அம்மணமாகிப்போன ஆசான்கள்!

எழுதுவதற்கே சற்று தலை சுற்றுகிறது இருந்தாலும் சிறிது நீர்பருகிய பின்  சற்று இளைப்பாரிவிட்டு பிறகு எழுதுகிறேன். ஏனென்றால் காலை முதல் தொடங்கிய மண்டசூடு துக்ளக் "அறிவாளி"களின் உரையாடலுக்குப்பிறகு உச்சத்திற்கு சென்று உச்சநட்சத்திரம் கக்கிய நஞ்சினை முறிக்கவே இந்த முடிவு தான் இந்த "நிர்வாணமாகிப்போன" காவி தர்பார்.
இந்துக்களை காக்கும் "விஜயபாரதத்தின்" தைப்பொங்கல் பாசம்-1
பதிவேற்றியுள்ள படத்தின் வரிகளை கவனமாகப் படிக்கவும் சரி ரொம்ப செரமப்பட வேணாம் நானே எழுதுறேன்.
"பகுத்தறிவாதிகள் பொங்கலை தமிழர்திருநாள்" என்று அழைக்கின்றனர். எங்காவது பொங்கல் பண்டிகையை தமிழ் பேசும் முஸ்லீம்களோ, தமிழ் பேசும் கிறிஸ்துவர்களோ கொண்டாடுகின்றார்களா? இல்லையே பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்று அழைத்தாலும் கொண்டாடுவது என்னவோ ஹிந்துக்கள் மட்டும் தான் என்று முடிக்கிறது, இந்த முடைநாற்றும் வீசும்  விஜயபாரதம்..அதற்கு ஆதார மறுப்பினை கீழே பாருங்கள்....↓
கீழக்கரை சதக் முஹமது கல்லூரியில் கொண்டாடிய சமத்துவப்பொங்கல் ( இந்து,முஸ்லீம் இணைந்து) படம்
இதைவிட சமத்துவப்பொங்கல் என்று சொல்வதற்கு வேறென்ன வேண்டும்!..
உங்களால் "தமிழர்திருநாள்" தைப்பொங்கல், சமத்துவப்பொங்கல் என்று கொண்டாட முடியாமல் எரிவதாலே! இவ்வாறு கந்தகம் போன்று கொப்பளிக்கிறீர்கள் ஏன் இது போன்று ஏதாவது ஒரு பார்ப்பனர்களுக்கு கொண்டாட மனமிருக்கிறதா?
உங்களுக்கு இருக்காது; ஏனென்றால் இவர்கள் தான் கிரேடு அன்ட் ஈக்குவாலிட்டியை உருவாக்கியவர்களாயிற்றே! அவர்களால் எவ்வாறு செய்ய இயலும்! மாறாக இவர்கள் ஏசுவதையும், இப்பண்பாட்டினை சிதைத்து அவர்களின் வழிகளை பின்பற்றவதற்காகவே முயற்சிக்கிறார்கள்.

அடுத்த ஒருவரின் தமிழ்பாச பொங்கல் வாழ்த்தினை பார்ப்போம்!...↓
இவரைப்பற்றி நான் என்ன சொல்லித்தெரிய...நாய்க்கு கூடத் தெரியும் போட்டியாளர் தனக்கு போட்டி யாரென்று. இவருக்குத் தெரிந்ததெல்லாம் #ஹிந்து நாட் ஏ இந்து மட்டும் தான்.


கருப்பைக்கண்டால் கதறும் காவி!
இவரின் நிறமோ கருப்பு, நடித்த படத்தின் தலைப்போ கருப்பு
( காலா) , சமீப காலங்களில் உடுத்தும் உடையோ கருப்போ ஆனால் இந்த கருப்புச் சட்டைக்கு தடை விதித்தது குறித்து கேட்பதற்கு துப்பில்லா தூய்மையானவர், குட்டிக் கதை சொல்லி குழம்ப வைக்கும் நேர்மையானவர்.

எழுவர் விடுதலைப்பற்றி கேட்டால் யாரென்று கேட்பார்?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கேட்டால் பதில்வராது?
சிஏஏ பற்றி பேசமாட்டார்?
370 குறித்து பேசமாட்டார்?
மீறி ஏதாவது கேட்டால் நான் இன்னும் கட்சி தொடங்கவில்லை, தொடங்கியபிறகு பதில் சொல்கிறேன் என்பார்!
வேறென்ன என்னதான் பேசுவார்?
வடிவேலுவின் பாணியில் நீ புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணி!
பாரதப்பிரதமர் கரிஷ்மா உள்ளவர்,
தேசத்தை பாதுகாக்க வந்தவர்கள்...,
பணமதிப்பிழப்பு திட்டம் என்பது பென்டாஸ்டிக்,
என்பது போன்ற பிதற்றலின் தொடர்ச்சியே... இன்றை துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் தான் என்ன நோக்கமுடையவன் என்றும், அரவம் தன் சட்டையினை கழற்றுவது போல் தன்னுடைய அரிதாரத்தை அழித்து தான் ஒரு "இந்துத்துவ பழம்" என்பது கொட்டை வெடித்து முத்திய கனியைப் போல ஒழுகி ஓடியிருக்கிறார். அதில் ஒன்றும் தவறில்லை ஆனால் உனக்கென்னப்பா நீ பைத்தியம், நீ என்னவெல்லாம் பேசலாம் என்று புரிதல் உள்ள மீம்ஸ் கிரியேட்டார்ஸ் போல உளயிருக்கிறார். அதனைப்படித்த போது தான் இதனைக் கட்டாயம் எழுதவேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்கெடுத்து ஓடியது... எமக்கு↓

துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்களாம்!
படத்திற்கு படம் பஞ்ச் வசனம் பேசி எம் வயதொத்த இளைஞர்களையும், என்னைவிட மூத்த சர்க்கரை நோயால் பாதிப்புக்குள்ளான பல பேரை இதோ வருகிறேன், வந்துட்டேன், போருக்கு ஆய்த்தமாவோம் , போர் தொடங்கியது என்று புரளிகளையை பொளப்பாய் வைத்திருக்கும்  நீரும் உம் குடும்பமும் அறிவாளிதான்!
இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லும் பொதுவாழ்வில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து அரசியல் வாதிகளுக்கு மத்தியல் 70 வயதிலும் அரசியல் செய்துகொண்டிருக்கும் நீர் அறிவாளிதான்!
மாநகராட்சிக் கட்டிதத்திற்கு தன் மனைவி வைத்த வாடகைப் பற்றி வாய்திறக்காத நீர் அறிவாளி தான்.

 வரலாற்றை பாதுகாப்போம்!
1971ல் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் சிலையில் செருப்பு மாலை அணித்து பெரியார் ஊர்வலம் நடத்தினார்.அது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது இதனால் கலைஞர் பெரிதும் பயந்தார் என்று தன்னுடைய இந்துவ அடிமை எனும் ரோமத்தினை உதிர்த்திருக்கிறார்.
வரலாற்றை மாற்றிய ஹிட்லரின் நிலையம் என்ன?
1971ல் சேலத்தில் தந்தை பெரியாரின் ஊர்வலத்தில் தோழர்களுடன் வண்டியில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்தார் பெரியார் அவர்கள். பெரியாரின் கூட்டத்திற்கு எதிர்ப்பு காட்ட வேண்டும் என்று அரசிடம் ஜனசங்கத்தால் ( இன்றைய பிஜேபி) அனுமதிகேட்கப்பட்டது. அவர்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டது. யாரால் பெரியாரின் கொள்கை வழியில் வந்த கலைஞரி கருணாநிதி அவர்களின் அரசினால்.அப்போது திட்டமிட்டு இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவன் பெரியாரை நோக்கி வீசிய செருப்பு தோழர்களின் கையில் அம்புட்டது.

அடுத்த நொடியே எங்கள் பெரியாரை நோக்கியா வீசுகிறீர்கள் என்று சொன்ன தோழர்கள் அதே செருப்பினை எடுத்து ராமன் படத்தினை அடித்தார்கள். அதை இன்றைக்கு நீங்கள் பேசியதைப்போல் அன்றைக்கு ஒரு கும்பல் தமிழகம் முழுவதும் இராமனை செருப்பால் அடித்த பெரியார் ஆதரிக்கும் திமுக வின் வேட்பாளருக்கா உங்கள் ஓட்டு? என்று தமிழகம் முழுவதும் சுவரொட்டி அடித்து ஒட்டியது.
விளைவு இது வரை தமிழக அரசியலில் யாரும் பெற்றிடாத   184 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது என்பதை திட்டமிட்டு மறைத்து பூசிமொழிகியிருக்கிறார்.

தான் யார் என்பதை வெளிப்படுத்தி நேரடி அரசியல் களத்திற்கு வந்து மீண்டும் ஒரு பண்பாட்டு படையெடுப்பிற்கு வித்திட்டுள்ளார் ஒரு பைசா செல்வில்லா 100 கோடி சம்பாரிக்கும்..சூப்பர்ஸ்டார்!



2.1.20

சமூகநீதி கப்பலில் பயணிக்கும் திமுக!


வரலாறுகள் அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். அப்படி ஓர் வரலாறு திரும்பிய நாள் தான் இன்று!
முன்னோடிகள்!
இவ்வரலாறு என்பது சாதாரண ஒன்றாக அமையவில்லை. மாறாக இதனை அமைக்க அரும்பாடு பட்டது முன்னோடிகளான தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் கடந்த வந்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் திமுக வின் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள், தனது லட்சியப்பயணத்தில் மேலும் ஒரு மைல் கல்லை கடந்திருக்கிறார். ஆம் அந்த மைல் கல் தான் எவரை அரவாணிகள் என்று இந்த சமூகம் ஒதுக்கிய போதும் அவர்களை தந்தை பெரியாரின் சமத்துவப் பார்வையில்,
"ஒரு நாடு மற்றொரு நாட்டினை ஒடுக்குமேயானால் அந்த ஒடுக்கப்படும் நாட்டின் பக்கம் நிற்பேன்!
ஒரு இனம் இன்னொரு இனத்தினை ஒடுக்குமேயானால் அந்த ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக நிற்பேன்!
ஒரு மொழி இன்னொரு மொழியை ஒடுக்குமேயானால் அந்த ஒடுக்கப்படும் மொழியின் பக்கம் நிற்பேன்!
ஒரு ஆண் ஒரு பெண்ணை ஒடுக்க நிணைத்தால் அந்த ஒடுக்கப்படும் பெண்ணின் விடுதலைக்காக நிற்பேன்"
என்று உரக்கச்சொன்ன பெரியார் அதோடு மட்டும் நிற்கவில்லை பெண்களுக்குச் சொத்துரிமை பற்றி பிரச்சினை வந்தபோது, அப்படிப் பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கப்பட்டால் இஷ்டப்பட்டவாளுடன் பெண்கள் ஓடிவிடுவார்கள் என்றவர் "காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி" ஓடிய 

சுதந்திரத்திற்கு முன்பே!

அதேநேரத்தில், 1929 ஆம் ஆண்டிலேயே பெண்களுக்குச் சொத்துரிமை தேவை என்று செங்கற்பட்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றச் செய்தவர் தந்தை பெரியார். 26.1937 க்கு முன் பெண்கள் சொத்தே வைத்து இருக்க கூடாது.1937 க்கு பிறகு வெள்ளைக்காரர்களால் தான் பெண்கள் சொத்து வைத்து இருக்கலாம் என்று சட்டம் வந்தது. இதன்படி சீதன சொத்து அல்லது சொந்தமாக வாங்கி வைத்து கொள்ளலாம் ஆனால் வாரிசுரிமைப்படி சொத்தில் பங்கு கிடையாது.
1956-ல் பெண்களுக்கு வாரிசுரிமை உண்டு ஆனால் அது தனிசொத்துக்கு மட்டுமே, பூர்வீக சொத்தில் வாரிசுரிமை கிடையாது என்று இருந்து வந்த சூழலில்,
திராவிட இயக்க ஆட்சியில்! 
1989 ல் அப்போதைய தமிழகத்தின் முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் பெரியார், அண்ணா அவர்கள் போட்டுத்தந்த தத்துவப் பாதையில், பெண்களுக்கு பூர்வீக சொத்தில் வாரிசுரிமை உண்டு என்று சட்டம் இயற்றினார்.

இந்தியா முழுமைக்கும்!
திமு கழகத்தின் தலைவரும், முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் சட்டம் இயற்றி 15 வருஷம் கழித்து திமுக கூட்டணி வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் 2005 ல் இந்தியா முழுவதும், பெண்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு பெறும் வாரிசுரிமையை சட்டமாக அமுல்படுத்தபடுத்தியது. இப்படியே பாலின சமூகநீதியில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கிய தமிழகத்தில் தான் பல காலமாக அலி, அரவாணி போன்ற சொற்களால் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ விருப்பம் போல் வாழ முடியாமலும், பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு  மன உளைச்சலுடன் சமூகத்தில் அங்கீகாரம் எதுவுமின்றி ஒடுக்கப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில்  வீழ்த்தப்பட்டு  வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வந்தவர்களுக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைத்திட வழிசெய்யும் வகையில் ஏப்ரல் 15 - 2008 அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் திருநங்கையர்களை பாதுக்காத்திடும் வகையில் தமிழக அரசால் திருநங்கையர்களுக்கென தனி நலவாரியத்தினை அறிவித்திட்டார். மேலும் அந்நாளினை ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையர் தினமாக கொண்டாட மார்ச் 11 20011 அரசானையும் பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு இருந்த வந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு திருநங்கையர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அரசாணை சேர்த்துள்ளது. இவ்வாறு இருக்கு நெடிய சமூக நீதிப்பயணத்தில் கடந்த  2019 பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி தஞ்சையில்   நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (Dravidian Manifesto) ஒன்றினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கையொப்பத்துடன் வெளியிட்டார். அதில் 33 அம்சங்களைக் கொண்ட அந்த அறிக்கை கையேடுதான்  இரு நாள் மாநாடுகளின் கதாநாயகன் என்று சொல்லவேண்டும். மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் தலைவர் கள் அந்த அறிக்கையைப் பெரிதும் பாராட்டினர். காலத் தால் வெளியிடப்பட்ட ஆவணம் - கருவூலம் என்று ஒருமனதாக அனைவரும் பாராட்டினர். அந்த அறிக்கையின் 12 வது வரிசையில் "ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள்  எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே என்ற அடிப்படையில் அனைத்து உரிமைகளின்  நுகர்வுக்கும் உரியவர்களே!" என்று சுட்டிக்காட்டியிருந்தன. இவ்வாறு தந்தை பெரியாரின் மறைவுக்குப்பிறகும் அவரது கொள்கையினை தொடர்ந்து முன்னெடுத்து வரும் திராவிட இயக்கங்களும், அதன்வழி வந்த அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவர் தளபதி முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல் கட்ட தேர்தலில் மிகத் துணிச்சலாக மக்கள் நம் பக்கம் என்பதை நீரூபிக்கும் பொருட்டு நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு ஒன்றியத்தின், ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய கருவேப்பம்பட்டி ஊராட்சியில் 5000 பேர் வாக்களர்களை கொண்ட 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, திமுக சார்பில் வேட்பாளராக திருநங்கை ரியா அவர்களை மனதார அறிவித்தார். அதோடு நின்று விடாமல் அவரது வெற்றிக்காக அப்பகுதியில் உள்ள திமு கழகத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உடன்பிறப்புகள் உட்பட சுழன்றடித்து பிரச்சாரம் செய்தனர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 02.01.2020 இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுமார் 11 மணியளவில் ஒரு வரலாற்று செய்தி முன்னனி தொலைகாட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் மின்னல் வேகத்தில் நவீன வார்த்தகளில் சொல்லுவேமேயானால் "வைரல்" ஆகிக்கொண்டிருந்தது. அந்த வைரலான செய்திதான்  இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி  முதல்  திருநங்கையான  ரியா அவர்கள் ஒன்று, இரண்டல்ல 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இப்பேர்பட்ட ஒரு பாலின சமத்துவ சமூகப்புரட்சியினை திருநங்கையர்கள் மட்டுமல்ல ஏனையவர்கள் பாராட்டிப் போற்ற வேண்டியது தந்தை பெரியார் வழியில் பயணித்த பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்கு அய்யாவின் ஆலோசனைப்படி முதல்வராகி அவரது கொள்கைக்கு சட்ட வடிவம் கொடுத்த மானமிகு சுயமரியாதைக்காரன் என்று திராவிடர் கழகத்தாரால் வாஞ்சையுடன் அழைக்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கும், நாளொரு மேனியும், பொழுதொருவண்ணம் பெரியாரின் கொள்கைகளை நினைவூட்டிப் பரப்பிக்கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும்..பாஜக பாசிச ஆட்சிக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு மாநில உரிமைகளை காவு கொடுத்துக்கொண்டிருக்கி இவ்வேளையில் அதனை மீட்டெடுக்கும் தலையாய பணியில் உழைப்பு உழைப்பு உழைப்பு என்று எதிர்கட்சியாக மட்டுமல்லாமல், ஆபத்தில் இருக்கும் மக்களை காப்பதில் உண்மையான ஆளும் கட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், திராவிட இயக்கத்தின் தற்போதைய தளபதி மானமிகு, மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தான். 
ஆதாரத் தரவுகள்:

1.1.20

கைங்கரிய" புத்தாண்டு!

தலைப்பைப் பார்த்தவுடன் சற்று ஆன்மிகம் சம்பந்தமுடையது என்று மனமகிழ்ச்சியடைவீர்களானால் அது நீங்கள் மிகவும் ஏமாளி மணமுடையவர்கள் என்று தான் பொருள் கொள்ளவேண்டும்.
நீங்கள் நினைக்கும் கைங்கர்யத்திற்கும் நான் இங்கு எழுதும் கைங்கர்யம் துளியும் தொடர்பில்லாது என்றால் அது மிகையாகாது.
ஆம்,  நான் இந்த "கைங்கர்ய" த்திற்கு தலைப்பிட்டதற்கு காரணம் பார்னீயத்தின் மூலமாக பார்ப்பனர்களை தோலுரிப்பதற்காகவே.
உலகெங்கும் உள்ள அனைவரும் ஆசை ஆசையாக நேற்றிரவு முதல் பெரும் மகிழ்ச்சியுடன் 2020 புது ஆண்டினை கொண்டாடி வருகின்றனர் முதல் நாடாக நியூசிலாந்தும் அதனைத் தொடர்ந்து மற்ற மற்ற அண்டை நாடுகளும் கொண்டிவந்துள்ளன. நான் தற்பொழுது எழுதும் வரையும் ஏதாவது ஒரு நாடு இதனைக் கொண்டாடிக்கொண்டிருக்கும். இந்த வேளை இங்கே தமிழகத்தில் உள்ள சில பார்ப்பன கும்பல்கள் கொழுத்த வசூலில் ஈடுபட்டுள்ளன. எப்படி இந்த வசூல் என்றால் புத்தாண்டு சிறப்பு பூஜையின் வாயிலாகத்தான். சென்னை வடபழனி முருகன் கோயிலிலும், மயிலாப்பூர் கபாலி கோயிலும், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலிலும் நேற்றைய தமிழ் பத்திரிக்கையின் மூலமாகவே விளப்பரப்படுத்தியிருந்தனர். என்னவென்றால் புத்தாண்டினை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று.
மொதல்ல இதுவே தப்பு!  ஒரு நல்ல சிந்தனை வாதியாக இருந்தால் அதென்னடா நடை திறப்புன்னு கேள்வி எழுப்பியிருக்கனும் ஆனால் அது இல்லை இங்கு.
இந்துக்கள் பெரும்பான்மையினர், நாங்கள் தான் அர்த்தமுள்ள இந்து, நாங்கள் தான் உயர்குலம், நாங்கள் தொடக்கூடிய ஜாதி, இந்து இந்துக்களுக்கான நாடு, ஹிந்துராஷ்டிரா என்று அதகளப் படுத்தி கதறிக்கொண்டிருக்கும் ஒரு கும்பல் இம்மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் ஏன் ஒரு மேற்கத்தியர்கள் கொண்டாடும் அதிலும் குறிப்பாக கிருஸ்துவர்கள் கொண்டாடும் புத்தாண்டினை கொண்டாட வேண்டும் அப்படி எதுவும் கொண்டாட சொல்லியும், கோயில் கருவறை ?( மூளையில் போடப்பட்ட விலங்கில் இருந்து மீளாமல் தவிக்கும் எளியோர்கள்) அதிகாலை திறக்கவேண்டும்? என்று எந்த ஆகம  விதிகளில் இருக்கிறது மேலும் சில இடங்களில் நள்ளிரவு 12 மணிக்கே சிறப்பு பூஜைகள் என்று சொல்லி தட்டின் மூலமாக கல்லாக் கட்டச் சொல்லி எந்த விதியில் இருக்கிறது என்று கேட்க வேண்டாமா?
இதனை நீங்கள் கேட்டால் ஆம் என்று சொல்வதற்கும் ஒரு பார்ப்பன கும்பல்கள் வரும்...இதில் நகைச்சுவைக்குரிய இரு கேளிக்கையும் நடந்திருக்கிறது ஒருவர் சாரணர் இயக்க தேர்தலில் கூட 50 ஓட்டு வாங்க போராடியவர் கடுமையாக எச்சரித்து சொல்லியிருந்தார் ஹிந்து, கோவில்கள் எதுவும் புத்தாண்டு கொண்டாடும் அன்று அதிகாலை கோவில்களை திறக்கக்கூடாது என்று ஆனால் அவர் இனத்தினைச் சேர்ந்த ஒரு கும்பல் இவர் பேச்சை செவிமடுக்காமல் தன் வருவாயின பெருக்கத்திற்கான வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்..ஆம் இவர்கள் இருக்கும் ஒரு புனித ஒப்பந்தம் நான் அடிக்கிற மாதிரி கத்துறேன் நீயும் வலிக்கிறமாதிரி கத்தும் எனும் டாக்சிசம் எனும் யுத்தி தான். இவர்களுக்கும் புத்தாண்டிற்கும் என்ன தொடர்பு? இவர்கள் தன் சொந்த மதத்தினரையே வருணபேதத்தில் பிரித்துவைத்து பிராமனன்,சத்திரியன், வைசியன், , சூத்திரன், பஞ்சமன் அப்படி இருக்க; மற்றவர்களை குறை சொல்வதற்திற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஹிந்து மதம் என்பதும், அதில் உள்ள மூடச் சடங்கு மற்றும் சம்பிருதாயங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்டவர்களால், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. நான் ஏன் இங்கு உருவாக்கப்பட்டது என்று சொன்னால் உருவானது என்று அது இயற்கை மாறாக உருவாக்கப்பட்டது என்றால் அது "செயற்கை"
எனவே தான் இந்த புத்தாண்டு "கைங்கர்ய" புத்தாண்டு என்று தலைப்பு வைத்துள்ளேன்.
நன்றி
நாள்: 01012020