வரலாறுகள் அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். அப்படி ஓர் வரலாறு திரும்பிய நாள் தான் இன்று!
முன்னோடிகள்!
இவ்வரலாறு என்பது சாதாரண ஒன்றாக அமையவில்லை. மாறாக இதனை அமைக்க அரும்பாடு பட்டது முன்னோடிகளான தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் கடந்த வந்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் திமுக வின் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள், தனது லட்சியப்பயணத்தில் மேலும் ஒரு மைல் கல்லை கடந்திருக்கிறார். ஆம் அந்த மைல் கல் தான் எவரை அரவாணிகள் என்று இந்த சமூகம் ஒதுக்கிய போதும் அவர்களை தந்தை பெரியாரின் சமத்துவப் பார்வையில்,
"ஒரு நாடு மற்றொரு நாட்டினை ஒடுக்குமேயானால் அந்த ஒடுக்கப்படும் நாட்டின் பக்கம் நிற்பேன்!
ஒரு இனம் இன்னொரு இனத்தினை ஒடுக்குமேயானால் அந்த ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக நிற்பேன்!
ஒரு மொழி இன்னொரு மொழியை ஒடுக்குமேயானால் அந்த ஒடுக்கப்படும் மொழியின் பக்கம் நிற்பேன்!
ஒரு ஆண் ஒரு பெண்ணை ஒடுக்க நிணைத்தால் அந்த ஒடுக்கப்படும் பெண்ணின் விடுதலைக்காக நிற்பேன்"
என்று உரக்கச்சொன்ன பெரியார் அதோடு மட்டும் நிற்கவில்லை பெண்களுக்குச் சொத்துரிமை பற்றி பிரச்சினை வந்தபோது, அப்படிப் பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கப்பட்டால் இஷ்டப்பட்டவாளுடன் பெண்கள் ஓடிவிடுவார்கள் என்றவர் "காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி" ஓடிய
சுதந்திரத்திற்கு முன்பே!
சுதந்திரத்திற்கு முன்பே!
1956-ல் பெண்களுக்கு வாரிசுரிமை உண்டு ஆனால் அது தனிசொத்துக்கு மட்டுமே, பூர்வீக சொத்தில் வாரிசுரிமை கிடையாது என்று இருந்து வந்த சூழலில்,
திராவிட இயக்க ஆட்சியில்!
1989 ல் அப்போதைய தமிழகத்தின் முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் பெரியார், அண்ணா அவர்கள் போட்டுத்தந்த தத்துவப் பாதையில், பெண்களுக்கு பூர்வீக சொத்தில் வாரிசுரிமை உண்டு என்று சட்டம் இயற்றினார்.
இந்தியா முழுமைக்கும்!
திமு கழகத்தின் தலைவரும், முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் சட்டம் இயற்றி 15 வருஷம் கழித்து திமுக கூட்டணி வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் 2005 ல் இந்தியா முழுவதும், பெண்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு பெறும் வாரிசுரிமையை சட்டமாக அமுல்படுத்தபடுத்தியது. இப்படியே பாலின சமூகநீதியில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கிய தமிழகத்தில் தான் பல காலமாக அலி, அரவாணி போன்ற சொற்களால் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ விருப்பம் போல் வாழ முடியாமலும், பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு மன உளைச்சலுடன் சமூகத்தில் அங்கீகாரம் எதுவுமின்றி ஒடுக்கப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் வீழ்த்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வந்தவர்களுக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைத்திட வழிசெய்யும் வகையில் ஏப்ரல் 15 - 2008 அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் திருநங்கையர்களை பாதுக்காத்திடும் வகையில் தமிழக அரசால் திருநங்கையர்களுக்கென தனி நலவாரியத்தினை அறிவித்திட்டார். மேலும் அந்நாளினை ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையர் தினமாக கொண்டாட மார்ச் 11 20011 அரசானையும் பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு இருந்த வந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு திருநங்கையர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அரசாணை சேர்த்துள்ளது. இவ்வாறு இருக்கு நெடிய சமூக நீதிப்பயணத்தில் கடந்த 2019 பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (Dravidian Manifesto) ஒன்றினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கையொப்பத்துடன் வெளியிட்டார். அதில் 33 அம்சங்களைக் கொண்ட அந்த அறிக்கை கையேடுதான் இரு நாள் மாநாடுகளின் கதாநாயகன் என்று சொல்லவேண்டும். மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் தலைவர் கள் அந்த அறிக்கையைப் பெரிதும் பாராட்டினர். காலத் தால் வெளியிடப்பட்ட ஆவணம் - கருவூலம் என்று ஒருமனதாக அனைவரும் பாராட்டினர். அந்த அறிக்கையின் 12 வது வரிசையில் "ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே என்ற அடிப்படையில் அனைத்து உரிமைகளின் நுகர்வுக்கும் உரியவர்களே!" என்று சுட்டிக்காட்டியிருந்தன. இவ்வாறு தந்தை பெரியாரின் மறைவுக்குப்பிறகும் அவரது கொள்கையினை தொடர்ந்து முன்னெடுத்து வரும் திராவிட இயக்கங்களும், அதன்வழி வந்த அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவர் தளபதி முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல் கட்ட தேர்தலில் மிகத் துணிச்சலாக மக்கள் நம் பக்கம் என்பதை நீரூபிக்கும் பொருட்டு நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு ஒன்றியத்தின், ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய கருவேப்பம்பட்டி ஊராட்சியில் 5000 பேர் வாக்களர்களை கொண்ட 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, திமுக சார்பில் வேட்பாளராக திருநங்கை ரியா அவர்களை மனதார அறிவித்தார். அதோடு நின்று விடாமல் அவரது வெற்றிக்காக அப்பகுதியில் உள்ள திமு கழகத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உடன்பிறப்புகள் உட்பட சுழன்றடித்து பிரச்சாரம் செய்தனர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 02.01.2020 இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுமார் 11 மணியளவில் ஒரு வரலாற்று செய்தி முன்னனி தொலைகாட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் மின்னல் வேகத்தில் நவீன வார்த்தகளில் சொல்லுவேமேயானால் "வைரல்" ஆகிக்கொண்டிருந்தது. அந்த வைரலான செய்திதான் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி முதல் திருநங்கையான ரியா அவர்கள் ஒன்று, இரண்டல்ல 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இப்பேர்பட்ட ஒரு பாலின சமத்துவ சமூகப்புரட்சியினை திருநங்கையர்கள் மட்டுமல்ல ஏனையவர்கள் பாராட்டிப் போற்ற வேண்டியது தந்தை பெரியார் வழியில் பயணித்த பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்கு அய்யாவின் ஆலோசனைப்படி முதல்வராகி அவரது கொள்கைக்கு சட்ட வடிவம் கொடுத்த மானமிகு சுயமரியாதைக்காரன் என்று திராவிடர் கழகத்தாரால் வாஞ்சையுடன் அழைக்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கும், நாளொரு மேனியும், பொழுதொருவண்ணம் பெரியாரின் கொள்கைகளை நினைவூட்டிப் பரப்பிக்கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும்..பாஜக பாசிச ஆட்சிக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு மாநில உரிமைகளை காவு கொடுத்துக்கொண்டிருக்கி இவ்வேளையில் அதனை மீட்டெடுக்கும் தலையாய பணியில் உழைப்பு உழைப்பு உழைப்பு என்று எதிர்கட்சியாக மட்டுமல்லாமல், ஆபத்தில் இருக்கும் மக்களை காப்பதில் உண்மையான ஆளும் கட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், திராவிட இயக்கத்தின் தற்போதைய தளபதி மானமிகு, மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தான்.
ஆதாரத் தரவுகள்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக