26.3.20

இரக்கமில்லாத பிசிசிஐ!


நானும் உங்களைப்போன்று கிரிக்கெட் ரசிகன் தான். ஆனால் சில நேரங்களில் என்னையும் மீறி எரிச்சலடையச் செய்கிறது அதன் நிர்வாகத்தினால்.

உயிர் பயத்தில் உலகப்போர்!
கொரோனா எனும் உயிரியல் போரில் உலகம் முழுவதும் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு வீட்டிலேயேத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடுமையை இந்த நூற்றாண்டில் பெற்றுக்கொண்டிருக்கும் நாம் பெருமைக்குரியவர்கள் அல்ல!
இப்பொழுது வரை ( March 26, 2020, 13:12 GMT ) நேரத்தின் படி உலகெங்கும் கொரோனாவால் 198 நாடுகளில் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 4,71,802 , அதில் இறந்தவர்களின் எண்னிக்கையோ 21,297  https://www.worldometers.info/coronavirus/#page-top  எனும் நிலையில் இன்னும்  எத்தனை உயிர்களை காவு வாங்க இருக்கும்? என்று ரத்தத்தை உறைய வைத்துக்கொண்டிருக்கின்றது.

கொரோனாவைப்பற்றி!


இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள நாடுகள்  தன் மக்களை போராடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்திய நாடும் அதற்கு தயாராகி களமிறங்கியிருக்கிறது என்றால் அது உண்மைதான் .
கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஒரு நாள் மக்கள் ஊரடங்கு  எனும் பெயரில் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். அதுவும் ஓரளவிற்கு மட்டுமே நிறைவேறிய நிலையில் இதற்கு மேலும் தாமதித்தால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாதென்பதைக் கருதி 24 ஆம் தேதி இரவு 8 மணிக்கு அவரது வழக்கமான மனதின் குரலின் மூலமாக நாட்டுமக்களுக்கு இந்த நோயின் வேகம் குறித்தும், தாக்கம் குறித்தும் ஓரளவிற்கு சொன்ன அவர் அதனைக்கட்டுப்படுத்த வேறு வழியின்றி 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார்.
அவர் அதில் சொல்லியது ஒன்று மட்டும் தான். அது "தனியார் நிறுவனங்கள்" தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்குங்கள் என்று.!

கிரிக்கெட் சங்கங்களின் பங்களிப்பு!
இலங்கையும் இந்த கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை விட மிகவும் பின்தங்கியுள்ள இலங்கை நாட்டின் கிரிக்கெட் சங்கம் தன்னுடைய பங்களிப்பாக 25 மில்லியன் இலங்கை ரூபாய் வழங்கியுள்ளது.
https://www.indiatoday.in/sports/cricket/story/sri-lanka-cricket-board-lkr-25-million-grant-coronavirus-1658732-2020-03-23

பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் தன்னுடைய அரசாங்கத்தின் நிதிக்கு ரூ.5 மில்லியனை வழங்கியுள்ளது. https://news.abplive.com/sports/pakistan-cricketers-to-donate-rs-5-mn-to-govt-emergency-fund-to-fight-covid-19-pandemic-1182623

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய நாட்டு மக்களுக்காக தங்களுடைய 15 நாள் ஊதியத்தை வழங்கியிருக்கின்றனர். https://sports.ndtv.com/cricket/coronavirus-bangladesh-cricketers-donate-half-month-salary-to-government-relief-fund-2200749

இரக்கமில்லாத பிசிசிஐ!
பிசிசிஐ எனும் பெயரை கிரிக்கெட் விளையாடுபவர்கள், ஆர்வலர்கள் அதனை எதிர்ப்பவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தெரியும் என்பதால் தான் இந்த தலைப்பை வைக்கச் செய்தது.
அது என்ன எதிர்ப்பவர்கள் என்று படிப்பவர்களுக்கு தோன்றலாம் நாம் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால் அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை அந்த குடுமி அவர்கள் கையில் தான் இருக்கிறது. 
உலக கிரிக்கெட் அமைப்புகளில் வருமானம் ஈட்டுதலில் முதல் இடத்தை பல வருடங்களாக தக்கவைத்துள்ளது இந்த பிசிசிஐ.  https://cricket.yahoo.net/news/top-10-most-affluent-cricket-182300645
உலகத்தில் முதல் முதலாக கிரிக்கெட்டை தொடங்கியவர்களே தொடமுடியாத தூரத்தில் ( விண்ணுக்கும்-மண்ணுக்கும்) இருக்கிறது இந்திய கிரிக்கெட் சங்கம். அதன் சொத்து மதிப்பானது சுமார் ரூ.15,000/-கோடி ( பதினைந்தாயிரம் கோடிகள் ) இருக்கும் என்று இணையதள ஆதாரச் செய்திகள் தரவுகள் தருகின்றன. 

 https://www.quora.com/How-did-BCCI-become-one-of-the-richest-sports-organizations-in-the-world

இதையும் தாண்டி இந்த சங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட ஐபில் மூலமாகவும் பல கோடிகள் புரண்டு கொண்டிருக்கும் பிசிசிஐ!

அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு பரிணாமங்களில் வருவாய் ஈட்டிக்கொண்டிருக்கும் பிசிசிஐ என்றால் அது மிகையாகாது.  பிசிசிஐ அறிவிப்பின் படி இந்திய பொருளாதாரத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.1203,64,00,000 கோடிகளை 2015 ஐபில் சீசனில் பகிரப்பட்டுள்ளது என்று தரவுகள் தருகின்றன. https://en.wikipedia.org/wiki/Indian_Premier_League#Foundation

மேலும் கூடுதலாக கடந்தாண்டு 2019 நடந்த ஐபில் ன்  மதிப்பான ( Brand Value  ) ரூ.3576,51,25,000 கோடிகள் என்று டஃப் அன்ட் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளது.  https://en.wikipedia.org/wiki/Indian_Premier_League#Foundation , https://www.duffandphelps.com/


இந்நிலையில் தான் இன்று பிசிசிஐ ன் தற்போதைய தலைவரும், முன்னால் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், முன்னாள் கொல்கத்தா கிரிக்கெட் அணியின் தலைவருமான திரு.சவ்ரவ் கங்கூலி அவர்கள் ரூ.50 லட்சத்தை கொரோனாக்கெதிரான நிதிக்காக வழங்கியுள்ளார்.

பலகோடி, கடைக்கோடி ரசிகர்களின் பணத்தில் செழித்து,வளமுடன் இருக்கும் இந்த சங்கங்கள் தான் இந்த இக்கட்டான தருணத்தில் உதவ முன் வராமல் இருப்பது வருத்தமளிக்கிறது. ஒரு வேளை இந்திய நாத்திகவாதிகள், சமூக நீதியாளர்கள் எப்பொழுதும் சொல்லும் ஒரு விடயம்; இந்த இந்திய கிரிக்கெட் சங்கம் பார்ப்பனர்கள் பிடியில் இருக்கும் வரை நம்மவர்கள் அதனை வேடிக்கை தான் பார்க்க இயலும் என்பது உண்மை தானோ? என்று யோசிக்க வைக்கிறது.

இப்போது நீங்களே சொல்லுங்கள் இதற்கு இந்த தலைப்பு வைத்தது சரிதானே? 

- நாடற்றவன்
  26.03.2020



20.3.20

மோ(ச)டி உரை!



கொரோனா எனும் உயிர்க்கொல்லி நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாகவும் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. உலகமே பதறிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் இந்தியாவிலும் சில விழுக்காட்டினர் இதனை உணர்ந்து செயல்படத் தொடங்கியுள்ளனர். அப்படியென்றால் மற்றவர்களுக்கு இந்த கொரோனாவைப் பற்றி அச்சமில்லையா? அல்லது அலட்சியமா? என்று கேட்கத்தோன்றுமானால் நாம் பொருளாதாரத்தின் மீது அக்கறையின்மையைக்காட்டும்.
ஏனென்றால் கொரோனாவில் இருந்து மீள்வதற்கும், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கும்; தனிமைப்படுத்திக்கொள்ளுதல், பொது இடங்களில் கூடுதல், திருமண மற்றும் சுற்றுலா , வெளியூர் போவதைத் தவிர்ப்பதால் நாம் அந்த உயிர்க்கொல்லியை அண்டவிடாமல் தடுத்தவிடலாம் ஆனால் இவற்றையெல்லாம் செய்தவதற்கு, நாம் மேலை நாடுகள் போன்று பொருளாதாரத்தில் கொழுத்திருக்கிறமோ என்றால்? இல்லை என்பதே உண்மை நிலை..

நிற்க!

அவ்வாறிருக்கும் நாடுகளே இந்த கொரோனாவைக் கண்டு அஞ்சி..தன் நாட்டு மக்களை காப்பற்றிட வேண்டும் என்று முழு அரசு பலத்தையும் பயன்படுத்தி இறங்கியிருக்கிறது. முழுபலம் என்பதில் பொதுப்போக்குவரத்தை நிறுத்தியிருப்பது மக்களை வெளியில் வரவிடாமல் எச்சரிக்கை கொடுத்து வீட்டில் வைத்திருப்பது மேலும் கொரோனா தொற்று இருப்பவர்கள் வீதிக்கு வந்தால் 21 ஆண்டுகள் சிறை எனப் பல்வேறு தடுப்பரண்கள் செய்தாலும் அவற்றையெல்லாம் விட அவர்கள் செய்த மிகப் பெரிய இரு பாதுகாப்பு என்னவென்றால் உழைக்கும், ஏழை- எளிய மக்களின் மீது கருணைப்பார்வை தான். 
அவர்கள் 15 நாட்களோ அல்லது 1 மாத காலமோ வீட்டினில் முடங்கியிருப்பதால் அவர்கள் அன்றாட வாழ்க்கைத் தேவையினை எவ்வாறு சமாளிப்பது என்பதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கென்று நிதி ஒதுக்கியிருக்கிறது. அதில் சில நாடுகளின் உதாரணங்களை தங்களுடைய பார்வைக்கு!

1. அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் ஊரடங்கு உத்தரவு  போட்டதோடு மட்டுமல்லாமல் தன்னுடை நாட்டு மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்காகவும், கொரோனாவில் இருந்து மீண்டெழுவதற்காகவும்
 1 ட்ரில்லியன் நிதியை ஒதுக்கியிருக்கிறது.
https://www.npr.org/2020/03/17/816822215/congress-weighs-new-massive-wave-of-emergency-funding-to-address-coronavirus

2. கனடா
கனடா நாட்டு பிரதமர் தன்னுடைய மக்களுக்காக கொரோனாவை ஒழிப்பதற்காக மருந்துவ ஆராய்ச்சிக்காகவும், மற்ற நாடுகளுக்கு பொருளாதார உதவி புரிந்ததோடு மட்டுமல்லாமல் தன் நாட்டு மக்களுக்காவும் 1 மில்லியன் இந்திய மதிப்பில் சுமார் 5348 கோடியை ஒதுக்கியிருக்கிறார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
https://sciencebusiness.net/news/canada-pledges-c275m-coronavirus-rd-adding-global-funding-rush

3. நியூசிலாந்து
உலகையே  அதிர்ச்சியில் உறைய வைத்த ஒரு நாடு என்றால் அது நியூசிலாந்து நாடுதான். அந்த நாடு தன் நாட்டு உழைக்கும் தினக்கூலி மக்களை கவனத்தில் கொண்டு 12.1 பில்லியன் டாலரை ( இது அவர்களது ஜிடிபியில் 4% ) ஒதுக்குவதாக நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அதன் நிதியமைச்சர் கிராண்ட் ராபர்ட்சன் அறிவித்துள்ளார். மேலும் அவர் தொழில் முனைவோர்களுக்கு உதவி புரியும் விதமாகவும் ஒதுக்கியிருக்கிறார். குறிப்பாக முழு நேர தொழிலாளர்களுக்கு வாரம் 585 டாலராகவும், பகுதிநேர தொழிலாளர்களுக்கு வாரம் 350 டாலராகவும் , இந்த திட்டமானது அறிக்கப்பட்ட இன்றிலிருந்து ஜூன் 30 ஆம் தேதிவரை அமல்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் வலியுடன் கூறிய வார்த்தைகளானது“We hope to save some jobs through this package, but we will not be able to save all jobs,” Robertson said. “We cannot guarantee that all workers will be retained. This is about helping businesses to adjust.”
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் சில வேலைகளைச் சேமிப்போம் என்று நம்புகிறோம், ஆனால் எல்லா வேலைகளையும் எங்களால் சேமிக்க முடியாது ”என்று ராபர்ட்சன் கூறினார். "அனைத்து தொழிலாளர்களும் தக்கவைக்கப்படுவார்கள் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. இது வணிகங்களை சரிசெய்ய உதவும்
நியூசிலாந்தின் இந்த  அறிவிப்பினை பிரபல கார்டியன் பத்திரிக்கை வெகுவாக சிலாகித்து எழுதியுள்ளதுhttps://www.theguardian.com/world/2020/mar/17/new-zealand-launches-massive-spending-package-to-combat-covid-19

இந்தியாவின் நிலை?
இந்தியாவில் 
தினக்கூலி தொழிலாளர்கள்,
ஒப்பந்த தொழிலாளர்கள்,
ஆட்டோ ஓட்டுனர்கள்,
டாக்சி ஓட்டுனர்கள்,
சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள்,
சிறு வியாபார் வணிகர்கள்,
உணவு விடுதி நடத்துபவர்கள்,
தனியார் துறையிலும், 
சமூக சேவை செய்யும் அறக்கட்டளையில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை என்னவாகும்?
இவர்களையெல்லாம் கிஞ்சின்றும் கருதாமல், மனதில் குரல் என்ற பெயரில் அனைவரும் தங்களை தாங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், வெளியே வரவேண்டாம், கூட வேண்டாம் , வழக்கமான பரிசோதனைகளுக்கு செல்லும் நோயாளிகள் அதனை ஒதுக்கிவையுங்கள் என்று ஒரு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அறிவிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்வதற்காகவா?  அறிவியலால்  சாத்தியமாகவில்லை என்று கூறிக்கொண்டும்,
உத்தவு பிறப்பிக்கும் முழு அதிகாரம் இருந்தும் தனியார்கள் அலுவலகங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதியங்கள் வழங்குங்கள் என்று அறித்திருக்கிறார்.. அதிலும் உச்சபட்ச அறிவிப்பு என்னவென்றால் வரும் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மாலை 5 மணிக்கு வீட்டு வாசலில் நின்று "கை" தட்டவேண்டும். அதெல்லாம் சரி
பிரான்ஸைப் போன்று சாதித்த பின்போ அல்லது வலிமையை உணர்த்துவதற்காகவோ அப்லாஸ் எனும் கைத்தட்டும் முறை அது.
கொரோனாவை ஒழிக்கும் முன்பு மக்களை "கை" தட்டச்சொல்லி,
மக்களை மடையர்களாக்கும் மோ(ச)டியை  உரையினை நிறுத்துங்கள்!

மாட்டு மூத்திரத்தை ஊக்குவிப்பதை விடுத்து மருத்துவர்களையும், மருத்துவ ஆராய்ச்சிகளையும் ஊக்கப்படுத்துங்கள்!

-நாடற்றவன்











15.3.20

கொரோனாவின் உலகப்போர்!

போர் ஆயுதங்கள்,தளவாடங்களுடன் தரைப்படைகள், வான்படைகள், கடல்படைகள் என பல உயிர்பலிகளுடன் நடைபெற்ற முடிந்த இரண்டு உலகப்போர்களை பார்த்த உலகநாடுகள், தாங்கள் இதுவரை காணாத ஒரு உலகப்போரினை எதிர்கொண்டுள்ளனர்.
இன்று கத்தியின்றி, ரத்தமின்றி சந்தித்திருக்கும் மூன்றாம் உலகப்போர் தான் இந்த "கொரோனா" ( கோவிட்-19 ) ( Coronavirus- Covid-19)  எனும் உயிர்க்கொல்லி வைரஸ்.

மார்ச் 15 -2020 அதிகாலை 5.20 பதிவு செய்யப்பட்ட தகவலின் படி உலகம் முழுவதும் 152 நாடுகளில் பரந்து சென்று கொண்டிருக்கிறது இந்த கொரோனா!
கொரோனா வின் பிறப்பிடம்!
சீனாவின் ஊபேய் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆண்டின் டிசம்பர் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸானது விலங்கில் இருந்து மனிதனுக்கு பரவியுள்ள தொற்றுநோய். இதன் பின்னர் ஜனவரி 30 ல் உலக சுகாதார அமைப்பு இத்தொற்றுபரவலை  பொது சுகாதார பண்பாட்டு அவசரநிலையாக ( PHEIC )  அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மார்ச் 12 -2020 அன்று இந்த கொரோனா- கோவிட் 19 யை உலக தொற்று நோய் என்று உலக சுகாதார அமைப்பு ( WHO ) அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கெதிராக அவசர தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறைக்கூவல் விடுத்துள்ளார் ஐநா வின் பொதுச்செயலாளர்  ஆன்டெனியோ குட்டரெஸ்.
இந்நோய் குறித்து சீன அரசினை எச்சரித்த 34 வயதான சீன மருத்துவர் இலீ வென்லியாங்க் .



கொரோனாவின் ஆட்டம்!
உலகம் முழுவதும் கொரோனாவால் 1,56,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,839 பேர் இறந்துள்ளனர் மேலும் 5,652 பேர் தீவிர அவசரசிகிச்சைப்ப்பிரிவிலும், 69,332 பேர் ஆரம்பகட்ட நிலையிலும் இருக்கின்றனர். இதில் ஆறுதலான விடயம் என்னவென்றால் 75,937 பேர் அதிதீவிர சிகிச்சைக்குப்பிறகு குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக இறந்தவர்கள் எண்ணிக்கையில் முறையே சீனா-3,209 பேரும், இத்தாலி-1441 பேரும், ஈரான்-611 பேரும் முதல் மூன்று இடங்களில் இருந்து வருகின்றது. இதில் கடைசியாக அமெரிக்காவின் விர்ஜின் தீவில் ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார். உலகம் முழுவதும் மணிக்கணக்கில் பரவிக்கொண்டிருக்கிறது.




இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை!..
இந்தியாவில் இன்றைய காலை நிலவரப்படி 100 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அதில் இரண்டு பேர் இறந்துள்ளனர் மேலும் 88 பேர் தீவிர கண்கானிப்பிலும் , 10 பேர் குணமடைந்துள்ளனர். இது இந்தியாவை இதோட விட்டு வைத்துவிடாது.. ஏனென்றால் உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு இந்தியா ஆனால் சுகாதாரத்திலோ அல்லது முன்னெச்சரிக்கையிலோ இன்னும் வளர்ந்த நாடுகள் , குறிப்பாக சீனா அளவிற்கு இல்லாததால் இக்கொரோனா தொற்று அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

கொரோனா எவ்வாறு பரவுகிறது?
கொரோனாவானது மனிதர்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.
1. இருமுவதால் ( தும்மல்)
2. மூக்கு, கண் மற்றும் வாய்கள் வழியாக 
3. கை விரல்களின்  மூலமாக
கொரோனாவை கண்டுபிடிப்பதற்கு 2 முதல் 14 நான்கு நாட்களை வரை ஆகலாம்.

கொரோனாவின் அறிகுறிகள்!
உலகளவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள அறிகுறிகள்..
1.காய்ச்சல்
2.இருமல்
3.மூச்சுத்திணறல்
4. உடம்புவலி
5. குழப்பம்
6. தலைவலி
7. நெஞ்சுவலி
8. தொடர்ந்து மூக்கு ஒழுகுதல்
9. வயிற்றுப்போக்கு
10. வாந்தி
மேலும் இந்த கொரோனா இதயநோயாளிகள், நீரழிவு நோயாளிகள், புற்றுநோயாளிகள் என எவரையும் விட்டு வைக்கவில்லை.
இதுவரை இறந்தவர்களின் தரவுகள் அடிப்படையில் பெண்களை விட இரண்டுமடங்கு ஆண்கள் தான்.
மேற்கண்டவைகளில் ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தினை அணுகவும்.

வதந்திகள்!
1. வெயில் அதிகமாக இருக்கும் நகரங்களில் வராது
2. வயதானவர்களை மட்டும் தொற்றுக்கொள்ளும்
3. மாட்டு மூத்திரம் குடித்தால் குண்மாகிவிடும்
4. குடிப்பவர்களுக்கு வராது
5. மஞ்சள் அதிகமாக எடுத்துக்கொண்டால் வராது
6. கோழிக்கறி சாப்பிடுவதால்

ஆன்மிகத்தால் சாத்தியமாகதது அறிவியலால் சாத்தியமாக்கியிருக்கிறது!

ஆம் உலகெங்கும் உள்ள பெரும்பான்மையான மதங்களின் பிடியில் தான் பல்வேறு மக்கள் பிடித்துவைக்கப்பட்டுள்ளனர். அது கிரிஸ்துவம், இஸ்லாம் மற்றும் இந்து மதம் உட்பட மதங்கள் பரவிக்கிடக்கின்றன ஆனால் இந்த கொரோனாவை இவைகளால் கட்டுப்படுத்த முடியவில்லை ஏனென்ன்றால் இவைகள் எல்லா கற்பனைகள் என்பது தற்பொழுது அம்பலமாகிக்கொண்டிருக்கின்றன.
இந்துக்கள் கோவிலுக்கு வராதீர்கள் என்று திருப்பதி முதல் சபரிமலை வரை கூவிக்கொண்டிருக்கின்றனhttps://www.patrikai.com/coronavirus-restrictions-in-tirupati/


ஏசு கிருஸ்து பிறந்த பெத்லகமே கேள்விக்குள்ளாகியுள்ளது! வாடிகன்


கிருஸ்துவ சர்ச்களின் நிலையும் அதே நிலைதான்.

சரி இவர்கள் இருவரில் இருந்து மாறுபட்ட இஸ்லாம் மதம் என்று பறைசாற்றிக்கொள்ளும் மெக்காவின் நிலையும் இவர்களுக்கு சரிசமமாக இருக்கிறது↓



மருத்துவர்கள் "கை"ப்பற்றியுள்ளனர்!
ஆன்மிகத்தால் முடியாதை மனித இனத்தின் அறிவியால் இந்த கொரோனாவை  கண்டுபிடித்து, கட்டுப்படுத்தி, குணமாக்கி  வருகின்றனர்.மருத்துவர்களின் பணி இதில் போற்றத்தக்கது.

பங்குச் சந்தை முதல் பரலோகத் தந்தை வரை,
மடங்கள் முதல் மால்கள் வரை ஆட்டம் காண வைத்துள்ளது இந்த கொரோனா!


கொரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி?
https://www.health.harvard.edu/diseases-and-conditions/coronavirus-resource-center
1.குடும்பத்திலோ அல்லது அருகில் இருப்பவர்கள் யாரெனும் உடல் நிலை சரியில்லாமலிருந்தால் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்

2.முழங்கைகள் வரை அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசரால் கழுவ வேண்டும்

3.வீட்டில் உள்ள பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

4. இருமல் வரும் போது கைக்குட்டை அல்லது டிஸ்சு பேப்பரை பயன்படுத்த வேண்டும்.

5. கைகளால் கண், மூக்கு, வாய் களை அடிக்கடி தொடுவதை தவிர்க்கவும்.

நோயற்ற வாழ்வே! குறைவற்ற செல்வம்!

- நாடற்றவன்