கொரோனா எனும் உயிர்க்கொல்லி நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாகவும் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. உலகமே பதறிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் இந்தியாவிலும் சில விழுக்காட்டினர் இதனை உணர்ந்து செயல்படத் தொடங்கியுள்ளனர். அப்படியென்றால் மற்றவர்களுக்கு இந்த கொரோனாவைப் பற்றி அச்சமில்லையா? அல்லது அலட்சியமா? என்று கேட்கத்தோன்றுமானால் நாம் பொருளாதாரத்தின் மீது அக்கறையின்மையைக்காட்டும்.
ஏனென்றால் கொரோனாவில் இருந்து மீள்வதற்கும், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கும்; தனிமைப்படுத்திக்கொள்ளுதல், பொது இடங்களில் கூடுதல், திருமண மற்றும் சுற்றுலா , வெளியூர் போவதைத் தவிர்ப்பதால் நாம் அந்த உயிர்க்கொல்லியை அண்டவிடாமல் தடுத்தவிடலாம் ஆனால் இவற்றையெல்லாம் செய்தவதற்கு, நாம் மேலை நாடுகள் போன்று பொருளாதாரத்தில் கொழுத்திருக்கிறமோ என்றால்? இல்லை என்பதே உண்மை நிலை..
நிற்க!
அவ்வாறிருக்கும் நாடுகளே இந்த கொரோனாவைக் கண்டு அஞ்சி..தன் நாட்டு மக்களை காப்பற்றிட வேண்டும் என்று முழு அரசு பலத்தையும் பயன்படுத்தி இறங்கியிருக்கிறது. முழுபலம் என்பதில் பொதுப்போக்குவரத்தை நிறுத்தியிருப்பது மக்களை வெளியில் வரவிடாமல் எச்சரிக்கை கொடுத்து வீட்டில் வைத்திருப்பது மேலும் கொரோனா தொற்று இருப்பவர்கள் வீதிக்கு வந்தால் 21 ஆண்டுகள் சிறை எனப் பல்வேறு தடுப்பரண்கள் செய்தாலும் அவற்றையெல்லாம் விட அவர்கள் செய்த மிகப் பெரிய இரு பாதுகாப்பு என்னவென்றால் உழைக்கும், ஏழை- எளிய மக்களின் மீது கருணைப்பார்வை தான்.
அவர்கள் 15 நாட்களோ அல்லது 1 மாத காலமோ வீட்டினில் முடங்கியிருப்பதால் அவர்கள் அன்றாட வாழ்க்கைத் தேவையினை எவ்வாறு சமாளிப்பது என்பதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கென்று நிதி ஒதுக்கியிருக்கிறது. அதில் சில நாடுகளின் உதாரணங்களை தங்களுடைய பார்வைக்கு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் ஊரடங்கு உத்தரவு போட்டதோடு மட்டுமல்லாமல் தன்னுடை நாட்டு மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்காகவும், கொரோனாவில் இருந்து மீண்டெழுவதற்காகவும்
1 ட்ரில்லியன் நிதியை ஒதுக்கியிருக்கிறது.
https://www.npr.org/2020/03/17/816822215/congress-weighs-new-massive-wave-of-emergency-funding-to-address-coronavirus
2. கனடா
கனடா நாட்டு பிரதமர் தன்னுடைய மக்களுக்காக கொரோனாவை ஒழிப்பதற்காக மருந்துவ ஆராய்ச்சிக்காகவும், மற்ற நாடுகளுக்கு பொருளாதார உதவி புரிந்ததோடு மட்டுமல்லாமல் தன் நாட்டு மக்களுக்காவும் 1 மில்லியன் இந்திய மதிப்பில் சுமார் 5348 கோடியை ஒதுக்கியிருக்கிறார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
https://sciencebusiness.net/news/canada-pledges-c275m-coronavirus-rd-adding-global-funding-rush
3. நியூசிலாந்து
உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்த ஒரு நாடு என்றால் அது நியூசிலாந்து நாடுதான். அந்த நாடு தன் நாட்டு உழைக்கும் தினக்கூலி மக்களை கவனத்தில் கொண்டு 12.1 பில்லியன் டாலரை ( இது அவர்களது ஜிடிபியில் 4% ) ஒதுக்குவதாக நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அதன் நிதியமைச்சர் கிராண்ட் ராபர்ட்சன் அறிவித்துள்ளார். மேலும் அவர் தொழில் முனைவோர்களுக்கு உதவி புரியும் விதமாகவும் ஒதுக்கியிருக்கிறார். குறிப்பாக முழு நேர தொழிலாளர்களுக்கு வாரம் 585 டாலராகவும், பகுதிநேர தொழிலாளர்களுக்கு வாரம் 350 டாலராகவும் , இந்த திட்டமானது அறிக்கப்பட்ட இன்றிலிருந்து ஜூன் 30 ஆம் தேதிவரை அமல்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் வலியுடன் கூறிய வார்த்தைகளானது " “We hope to save some jobs through this package, but we will not be able to save all jobs,” Robertson said. “We cannot guarantee that all workers will be retained. This is about helping businesses to adjust.”
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் சில வேலைகளைச் சேமிப்போம் என்று நம்புகிறோம், ஆனால் எல்லா வேலைகளையும் எங்களால் சேமிக்க முடியாது ”என்று ராபர்ட்சன் கூறினார். "அனைத்து தொழிலாளர்களும் தக்கவைக்கப்படுவார்கள் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. இது வணிகங்களை சரிசெய்ய உதவும்
நியூசிலாந்தின் இந்த அறிவிப்பினை பிரபல கார்டியன் பத்திரிக்கை வெகுவாக சிலாகித்து எழுதியுள்ளது. https://www.theguardian.com/world/2020/mar/17/new-zealand-launches-massive-spending-package-to-combat-covid-19
இந்தியாவின் நிலை?
இந்தியாவில்
தினக்கூலி தொழிலாளர்கள்,
ஒப்பந்த தொழிலாளர்கள்,
ஆட்டோ ஓட்டுனர்கள்,
டாக்சி ஓட்டுனர்கள்,
சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள்,
சிறு வியாபார் வணிகர்கள்,
உணவு விடுதி நடத்துபவர்கள்,
தனியார் துறையிலும்,
சமூக சேவை செய்யும் அறக்கட்டளையில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை என்னவாகும்?
இவர்களையெல்லாம் கிஞ்சின்றும் கருதாமல், மனதில் குரல் என்ற பெயரில் அனைவரும் தங்களை தாங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், வெளியே வரவேண்டாம், கூட வேண்டாம் , வழக்கமான பரிசோதனைகளுக்கு செல்லும் நோயாளிகள் அதனை ஒதுக்கிவையுங்கள் என்று ஒரு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அறிவிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்வதற்காகவா? அறிவியலால் சாத்தியமாகவில்லை என்று கூறிக்கொண்டும்,
உத்தவு பிறப்பிக்கும் முழு அதிகாரம் இருந்தும் தனியார்கள் அலுவலகங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதியங்கள் வழங்குங்கள் என்று அறித்திருக்கிறார்.. அதிலும் உச்சபட்ச அறிவிப்பு என்னவென்றால் வரும் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மாலை 5 மணிக்கு வீட்டு வாசலில் நின்று "கை" தட்டவேண்டும். அதெல்லாம் சரி
பிரான்ஸைப் போன்று சாதித்த பின்போ அல்லது வலிமையை உணர்த்துவதற்காகவோ அப்லாஸ் எனும் கைத்தட்டும் முறை அது.
கொரோனாவை ஒழிக்கும் முன்பு மக்களை "கை" தட்டச்சொல்லி,
மக்களை மடையர்களாக்கும் மோ(ச)டியை உரையினை நிறுத்துங்கள்!
மாட்டு மூத்திரத்தை ஊக்குவிப்பதை விடுத்து மருத்துவர்களையும், மருத்துவ ஆராய்ச்சிகளையும் ஊக்கப்படுத்துங்கள்!
-நாடற்றவன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக