28.12.19

மாற்றம் சொல்லும் மித்ரனின் ஹீரோ!

டயருக்கு அடியில் வைக்கபடும் எலுமிச்சைப்பழத்திற்கு சொல்லும் வியக்ஞானத்தில் தொடங்கி ஜெய்ஹிந்த் ல் முடியும் திரைப்படம் படம் ஹீரோ!
அப்படி என்னத்ததான் சொல்லிபுடிச்சி ஹீரோன்னு அவசர அவசரமா தூக்கத்த தொலைச்சு நைட் பத்தே முக்காலு மணிக்கு தியேட்டருக்குள்ள போனேன். நல்ல வேள வந்த வேகத்துல போனதும் சீட்ல உக்கார்ந்தோம்....அப்பதான் தெருஞ்சிச்சு வழக்கமா சடங்குக்கிற்காக ஒளிபரப்பப்படும் பாடல் முடிந்தது. அப்படியே படந்தான் முடிஞ்சு சீட்ல இருந்து எந்திருச்சு நகரலாம்னு பார்த்தா; எல்லாரும் ஸ்கீரினையே உத்து பார்த்து கைத்தட்டிக்கிட்டு  நிக்கிறாங்க...சரின்னு நானும் பார்த்தேன் ...அதுல படத்துல சொன்ன விசயத்திற்கான ஆதாரங்கள் ஓடிட்டிருக்கு...வேறென்ன பன்றது நானும் எங்கூட வந்த அந்த தடிப்பய தம்பியும் சரி வா ஒரு நல்ல கான்சப்டான்ன படம் தான் பார்த்திருக்கிறோம்னு பேசிக்கிட்டே கிளம்பி வந்துட்டோம்.... ஓ...அப்ப கதையபத்தி ஏதாவது சொல்லனுமோ?..சொல்லிடுவோம்
நான் முன்னாடியே சொன்னமாதிரி ஆன்மிகம்னு ஆரம்பிச்சு ஜெய்ஹிந்து முடிக்கிறதுக்குள்ள இடையில  சக்திய வைச்சு துண்டு துண்டா அரசுகளையும், கல்வி முறை கேடுகளை வச்சு செஞ்சிருக்கிறாரு இயக்குனர் பிஎஸ்.மித்ரன். 
போலிச் சான்றிதழ் மூலமாக பள்ளிகள் உட்பட பதவி உயர்வு வரைக்கும் பயன்படுத்துபவற்றுயும், நுழைவுத்தேர்வு எனும் வியாபரத்தையும் அப்பட்டமாக விளக்கியிருக்கிறார். வழக்கத்தில் இல்லா மொழிக்கு அதிகமாக நிதி ஒதுக்கும் மத்திய அரசு நண்பருக்காக இல்லாத பெயரில் நிதி ஒதுக்கிய சம்பவத்தை இயக்குனர் "ரியோ யுனிவர்சிட்டி" ( ஜியோ யுனிவர்சிட்டி நினைவிற்கு வந்தால் நான் பொருப்பல்ல )
என வைத்து மீண்டும் நினைவு படுத்தியிருக்கிறார். இங்கே மார்க் குறைந்தவர்களை மட்டம் தட்டும் போக்கினை மாற்றி அவர்களுக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் சுட்டிக்காட்டியிருக்கிறார். நமது கல்வி முறையானது மனப்பாடம் செய்வதும், ஒரு வித அச்சத்துடன் மாணவர்கள் கடைசிவரை இருப்பதை மாற்றி பின்லாந்து, கியூபா போன்று வாழ்வியல் அனுபவப்பாடங்களை சொல்லித்தரும் முறை வேண்டும் என சொல்ல மெனக்கெட்டிருக்கிறார். சிந்தனை எனும் அறிவினை எவராலும் அழிக்கமுடியாது எனச் சொல்லும் வசனத்தின் போது தியேட்டரில் கைத்தட்டல் எகிருகிறது.( "ஒருவனை அழித்து விடலாம், அவனது சிலையை உடைத்து விடலாம் ஆனால் அவனது சிந்தனைகளை அழிக்க முடியாது" )
இன்டலெக்சுவல் ப்ராப்பர்டி ரைட்ஸ் ல் நடக்கும் மோசடிகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த கல்வியை வியாபாரமாக்கும் கலவிக்குழுமங்களையும் அடையாளம் காட்ட தவறவில்லை.

சக மனிதனை மனிதனாக மதிப்பவனே ஹீரோ! என யுவன்சங்கர் ராஜா பாடும் பாடல்களிலும் சமத்துவத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். பிண்ணனி இசையில் பிண்ணி எடுத்திருக்கும் இசையமைப்பாளர் யுவன் பாராட்டத்தக்கவர்.

நாட் அ அவுக்காம கதைய சொல்லிடுறேன்!

ஹீரோ ஒரு போலி சர்ட்டிபிகேட் போட்டு குடுக்குற பிராடு...
அவருக்கு பிராடு பன்ரு எல்லா கலேஜூம் அத்துபடி.... 
அறிவியல் சிந்தனைக்கு மதிப்பெண் தடையில்லை எனக்கூறி மாணவர்களின் நுண்ணறிவினை சாதனையாக்கி காட்டிருக்கும் மாஸ்டர் கதாபாத்திரத்தில் அர்ஜூன் கச்சிதமாக பொருந்திப்போயிருக்கிறார்.
தன்னுடைய பக்கத்து வீட்டு பெண்ணுக்கு ஏரோ நாட்டிகல் படிப்பதற்கு ஆசை அதை தான் ஒரு பைசா செலவின்றி சீட் வாங்கித் தருவதாக உறுதியளிக்கும் சிவகார்த்திகேயன் தான் சக்தி எனும் ஹீரோ கதாபாத்திரம். அந்த மதிக்கு சீட்டு கிடைச்சதா? சக்தி ஏன் இவ்வளவையும் செஞ்சார்னு மீதி படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க!
இந்தப்படம் குடும்பத்துடன் குறிப்பாக பள்ளிமாணவர்கள்,ஆசிரியர்கள் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய படம்தான் இந்த #ஹீரோ



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக