1975 ஆண்டில் வெளியான அபூர்வ ராகங்கள் எனும் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் தான் சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட "ரஜினிகாந்த்".
1978 ல் "பைரவி" படத்தின் முக்கிய கதாநாயகனாக நடித்த ரஜினிகாந்த் இப்படத்தில் தான் இவருக்கு "சூப்பர் ஸ்டார்" எனும் பட்டம் இவர் பெயருடன் சேர்த்து போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றே வந்துள்ளன. குறிப்பாக அவரது சொந்த தயாரிப்பில் தயாரித்து நடித்த படங்களைத் தவிர்த்து மற்ற படங்கள் அனைத்தும் சூப்பர், டூப்பர் , மெகா என பெரு வெற்றிகளையும், வசூல்களையும் வாரிக்குவித்து, மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராகவே உள்ளங்களிலும், நேரிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு 41 ஆண்டுகள் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் இவருக்கு 2019 ஆண்டு முதல் அவரது சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரஜினிகாந்த் அவர்கள் சூப்பர் ஸ்டாராக வந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு 1992 ல் கதாநாயகனாக நடித்து வந்திருக்கும் "தளபதி" விஜய் எனும் ஜோசப் விஜய் அவர்களிடம் பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான "பிகில்" திரைப்படத்தின் வசூல் குவியலின் மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வெளிவந்த "பேட்ட" திரைப்படம் உலகம் முழுவதும் வசூலித்த ரூபாய் 250 கோடியை முறியடித்து "பிகில்" திரைப்படம் 300 கோடியைத் தாண்டி வசூலித்து பாக்ஸ் ஆபிசில் 2019 க்கான நம்பர் 1 நடிகராக மாறியிருக்கிறார். தமிழ் சினிமாவின் "தளபதி" எனும் விஜய் யின் சமீபத்திய படங்கள் பெரும்பாலும் 100 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளன இதனால் தான் என்னவோ; "பைரவா" படத்தில் வில்லன், ஹீரோவான விஜயைப் பார்த்து " நீ என்ன பெரிய வசூல் மன்னனா? என்று கேட்பாரு அதுக்கு ஹீரோ விஜயும் தெரியல அப்படி தான் சொல்லிக்கிறாங்க!" னு பதில் சொல்லும் மாதிரி வசனமும் திரையில் வைக்கப்பட்டிருக்கிறது. விஜயின் திரைப்படங்களும் ஐந்து கண்டங்களில் சுமார் 80 நாடுகளில் வெளியாகின்றன. இவரின் நண்பா , நண்பி எனும் வார்த்தைகளும், என் நெஞ்சில் குடியிருக்கும் எனும் உச்சரிப்பும் ரசிக, ரசிகைகளை உற்சாகப்படுத்தும் எனர்ஜி ட்ரிங்காகவே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
விஜயின் சமூக சேவைகளும், அவ்வப்போது அரசுகளின் தவறுகளை தனது வசனங்கள் மூலம் விமர்சிப்பதாலும் இவர் மீதான இளசுகள் முதல் பெருசுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கிறது. தளபதி விஜய் தலைவர் விஜயைகா மாறுவதை விட, வெகுவிரைவில் அதிகாரப்பூர்வமாக #கமர்சியல்சூப்பர்ஸ்டார் அல்லது சூப்பர் ஸ்டார் விஜய் " என்று அழைக்கபடுவார்......என்றே தான் தோன்றுகிறது!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக